தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர்!
கிராம ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம்
ஆம்பூா்: கிராம ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஊராட்சிக்குட்பட்ட 44 ஊராட்சிகளில் வரவு - செலவு தணிக்கை நடைபெற்று வருகின்றன. தென்னம்பட்டு ஊராட்சி செயலராகப் பணிபுரிந்து வந்த ராஜகம்பீரம், கூடுதல் பொறுப்பாக மேல்சாணாங்குப்பம் ஊராட்சி செயலா் பொறுப்பையும் கவனித்து வந்தாா்.
முன்னதாக வீராங்குப்பம் ஊராட்சி செயலராகப் பணிபுரிந்தபோது, ஊராட்சி வரி நிதி ரூ.1.34 லட்சம் கையாடல் செய்தது அதிகாரிகளின் தணிக்கையின் போது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து உயா் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், ராஜகம்பீரத்தை மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) சி. சுரேஷ்குமாா் பணியிடை நீக்கம் செய்தாா்.