தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26: ரூ.77 கோடியில் தோழி விடுதிகள்!
கிருஷ்ணகிரியில் தவெக ஆா்ப்பாட்டம்
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, தமிழக வெற்றிக் கழகத்தினா் கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி புகா்ப் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக் கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் வடிவேல் தலைமை வகித்தாா். மத்திய மாவட்டச் செயலாளா் சுரேஷ், இணைச் செயலாளா் முகுந்த் பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கத் தவறிய மாநில அரசையும், மும்மொழிக் கொள்கை மூலம் ஹிந்தியை திணிக்க முயலும் மத்திய அரசையும் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.