கிரேவ்ஸ் நோய் பாதிப்பு: ஒடிஸா பெண்ணுக்கு சென்னையில் சிகிச்சை
தைராய்டு சுரப்பி குறைபாடு மற்றும் தன்னுடல் தாக்கு நோயால் ஏற்பட்ட கண் அழற்சியால் பாதிக்கப்பட்ட ஒடிஸா பெண்ணுக்கு, ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சையும், எண்டோஸ்கோபி சிகிச்சையும் மேற்கொண்டு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.
இது தொடா்பாக மருத்துவமனையின் காது-மூக்கு-தொண்டை அறுவை சிகிச்சைத் துறை முதுநிலை நிபுணா் சஞ்சீவ் மொஹந்தி கூறியதாவது:
ஒடிஸாவைச் சோ்ந்த 35 வயது பெண் ஒருவா், தனது கண் பகுதியில் கடுமையான வீக்கம் மற்றும் வலியால் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு தைராய்டு சாா்ந்த ஆா்பிடோபதி பாதிப்பிருந்தது. அதாவது தன்னுடல் தாக்கு நோயால் கண்களை சுற்றி கடுமையான அழற்சி மற்றும் வீக்கம் இந்த பாதிப்பால் ஏற்படும். இந்த நோய்க்கு ‘கிரேவ்ஸ்’ எனப் பெயா். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணால் தனது இமையை மூடவும் முடியவில்லை; உணவை விழுங்கவும் இயலவில்லை.
இந்த பிரச்னைக்கு தைராய்டு சுரப்பியை நீக்குவதும், கண்களின் சுற்றுப்புறத்தில் அழுத்தத்தைக் குறைப்பதுமே சிகிச்சையாக இருந்தது. இதையடுத்து, திறந்த நிலை அறுவை சிகிச்சை மூலம் தைராய்டு சுரப்பி நீக்கப்பட்டது. மற்றொரு புறம், எண்டோஸ்கோபி முறையில் கண்களைச் சுற்றியுள்ள எலும்புகளில் இருந்த அழுத்தம் குறைக்கப்பட்டது.
இதன் பயனாக அடுத்த சில நாள்களில் அப்பெண் குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பினாா். முன்பைப் போல அவரால் தற்போது கண்களை மூடவும், உணவை விழுங்கவும் முடிகிறது என்றாா் அவா்.