``RSS இந்தியாவின் கலாசார ஆலமரம்'' - ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர ம...
குஜராத்தில் 54 தொடக்கப் பள்ளிகள் மூடல்! 341 பள்ளிகள் ஒரே அறையில்!
குஜராத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மாணவர்கள் வருகைப் பதிவு குறைவு காரணமாக 33 மாவட்டங்களில் உள்ள அரசின் 54 தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது.
பள்ளிகள் மூடப்பட்டது குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ கிரித் படேல் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த கல்வித் துறை அமைச்சர் அதுபற்றிய தரவுகளை பேரவையில் சமர்ப்பித்தார். அதில், துவாரகா மாவட்டத்தில் 9 பள்ளிகளும், ஆரவல்லி(7), அம்ரெலி(6), போர்பந்தர்(6), ஜுனாகத் (4), சோட்டா உதய்ப்பூர், கட்ச், ராஜ்கோட்டில் தலா மூன்று பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. அதேபோன்று கேதா, ஜாம் நகர், நவசரி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இந்தப் பிரச்சினை இந்த மாவட்டங்கள் மட்டுமின்றி, பாவ்நகர், டங், கிர் சோம்நாத், மஹசனா, பஞ்சமஹால், சூரத், சுரேந்திரநகர் ஆகிய மாவட்டங்களும் தலா ஒரு பள்ளியை இழந்திருக்கின்றன.
சிதிலமடைந்த பள்ளிகளும் ஒற்றை வகுப்பறைகளும்!
பள்ளிகள் மூடப்படுவது ஒருபுறம் இருக்க பள்ளியின் கட்டமைப்புகளையும் வெகுவாக மாணவர்களின் கல்வியைப் பாதித்திருக்கிறது. கடந்தாண்டு பிப்ரவரியில் காங்கிரஸ் எம்எல்ஏ ஷைலேஷ் பார்மரின் கேள்விக்கு பதிலளித்த ஆளும் அரசு 341 பள்ளிகள் வெறும் ஒரேயொரு வகுப்பறையுடன் செயல்படுவதையும் ஒப்புக் கொண்டிருக்கிறது. குறைவான மாணவர்களில் வருகையே பள்ளிக் கட்டமைப்புகளுக்கு காரணம் என்று அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், பாழடைந்த பள்ளிக் கட்டடங்களை இடித்து புதிய பள்ளிக் கூடங்கள் கட்டுவதற்கு போதிய இடமில்லை என்றும் பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரேயொரு ஆசிரியர் மட்டும் உள்ள 1,606 பள்ளிகள்
இது ஒருபுறம் இருக்க மற்றொரு அதிர்ச்சி தரும் தகவலாக குஜராத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மொத்தமுள்ள 32,000 பள்ளிகளில் 1,606 பள்ளிகள் வெறும் ஒரு ஆசிரியருடன் செயல்பட்டு வருகின்றன. குஜராத்தின் கல்வி அமைப்புகளில் உள்ள இந்தப் புள்ளி விவரங்கள் அனைவரையும் திகைக்க வைத்தாலும், மாணவர்களில் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலையில் இருக்கிறது.
விளையாட்டு மைதானங்கள் எங்கே?
இந்தக் கட்டமைப்பு வசதிக்கான பிரச்சினைகள் வகுப்பறையுடன் மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 5,012 அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு விளையாட்டு திடல்கள் என்ற தரவுகளையும் வெளியிட்டிருக்கிறது. இதனால், மாணவர்கள் போதிய விளையாட்டு மைதானங்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
தொடக்கப் பள்ளிகள் மட்டுமின்றி மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளிலும் இதே நிலைமைதான். 78 அரசுப் பள்ளிகள், 315 அரசு உதவிபெறும் பள்ளிகள், 255 தனியார் பள்ளிகள் மைதானங்கள் இன்றி இயங்கி வருகின்றன. குஜராத்தில் இதுபோல 12,700 பள்ளிகள் உள்ளன. 37 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் 509 தனியார் தொடக்கப் பள்ளிகளிலும் விளையாட்டு மைதானங்கள் இல்லை.
குறைந்து வரும் மாணவர்கள் சேர்க்கை அவற்றால் சரிந்துவரும் ஆசிரியர்களில் எண்ணிக்கையில் குஜராத்தின் கல்வித் தரம் மேலும் கேள்விக்குறிதான்!
இதையும் படிக்க: அதிரடியாக உச்சம் தொட்ட தங்கம் விலை! அதிர்ச்சியில் மக்கள்!