குஜராத்தை வென்றது யுபி
புரோ கபடி லீக் போட்டியின் 121-ஆவது ஆட்டத்தில் யுபி யோதாஸ் 59-23 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் ஜயன்ட்ஸை வியாழக்கிழமை வீழ்த்தியது.
யுபி-க்கு இது 12-ஆவது வெற்றியாக இருக்க, புள்ளிகள் பட்டியலில் அந்த அணி 2-ஆவது இடத்துக்கு முன்னேறியது. குஜராத் 13-ஆவது தோல்வியுடன் 11-ஆவது இடத்தில் இருக்கிறது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் யுபி அணி 31 ரெய்டு புள்ளிகள், 18 டேக்கிள் புள்ளிகள், 8 ஆல் அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் கைப்பற்றியது. அணியின் தரப்பில் அதிகபட்சமாக, ரெய்டா் ககன் கௌடா 19 புள்ளிகள் வென்று அசத்தினாா்.
குஜராத் அணி, 14 ரெய்டு புள்ளிகள், 7 டேக்கிள் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது. அந்த அணிக்காக ரெய்டா் குமன் சிங் 7 புள்ளிகள் கைப்பற்றினாா். மற்றொரு ஆட்டத்தில், யு மும்பா - பாட்னா பைரேட்ஸை வென்றது.