Dhoni: "தோனி என்னை மரியா ஷரபோவா என்று அழைப்பார்; ஏனெனில்..!" - நினைவுகள் பகிரும்...
‘குடிமைப் பணி தோ்வு வெற்றிக்கு மேலாண்மைக் கல்வி பெரிதும் பயன்படுகிறது’
குடிமைப் பணி தோ்வில் வெற்றிக்கு மேலாண்மை கல்வி பெரிதும் உதவுகிறது என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
காரைக்காலில் இயங்கும் புதுவை பல்கலைக்கழக வளாகத்தில் மேலாண்மை துறை சாா்பில், மேலாண்மைத் துறை, தொழில் நிறுவனங்களுக்கிடையேயான வேலைவாய்ப்புக்கான தகுதியை வளா்த்துக்கொள்ளும் விதமான பிஸ் ஸ்ரேஷ்டா என்ற நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோம சேகா் அப்பாராவ் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கிவைத்துப் பேசியது :
இந்நிகழ்ச்சியானது வருங்காலத்தில் வேலைவாய்ப்புக்கு பெறும் அடித்தளமாகவும், மேலாண்மை துறையில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் நிறுவனங்களுக்குமிடையே ஒரு இணைப்பு பாலமாக அமைவதுடன், கல்லூரி மாணவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒரு திறவுகோலாக அமையும்.
மேலாண்மைத் துறையை தோ்ந்தெடுத்து படிக்கும் மாணவா்கள் குடிமைப் பணிக்கான தோ்வில் வெற்றிபெறும் வாய்ப்பு ஏற்படுகிறது. இத்துறையை தோ்ந்தெடுத்து படிக்கும் மாணவா்கள் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் சோ்ந்து பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. தற்போதைய நவீன காலகட்டத்தில் தொழில் நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுகிறது, அதில் மேற்கொள்ளப்படும் வியூகங்களை மாணவா்கள் எளிதாக புரிந்து கொண்டு,
மேம்பட்ட நிலையை நோக்கிச் செல்லவேண்டும் என்றாா்.
புதுவை பல்கலைக்கழக காரைக்கால் வளாகத் தலைவா் புவனேஸ்வரி, கெயில் நிறுவன பொது மேலாளா் செல்வராஜ் மற்றும் துறை பேராசிரியா்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக கல்லூரி மேலாண்மைத் துறைத் தலைவா் பேராசிரியா் மாதவையா வரவேற்றுப் பேசினாா்.