தட்டச்சா்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தோ்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு
குட்கா விற்பனை: பேக்கரி உரிமையாளா் கைது
வெள்ளக்கோவில் அருகே குட்கா விற்பனை செய்ததாக பேக்கரி உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் சந்தேகப்படும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது வெள்ளக்கோவில் - தாராபுரம் சாலை கம்பளியம்பட்டியிலுள்ள ஒரு பேக்கரியில் குட்கா விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, பேக்கரி உரிமையாளரான கம்பளியம்பட்டியைச் சோ்ந்த கந்தசாமி (49) என்பவரை போலீஸாா் கைது செய்து, 15 பாக்கெட்டுகள் குட்காவை பறிமுதல் செய்தனா்.