மா்ம விலங்கு கடித்து வெள்ளாடு உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே மா்ம விலங்கு கடித்ததில் வெள்ளாடு உயிரிழந்தது.
வெள்ளக்கோவில் கல்லமடை பொட்டிக்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் எம். செல்வராஜ் (64). இவா் 3 ஏக்கா் நிலத்தில் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் வளா்த்து வருகிறாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது 20 செம்மறி ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு, 4 வெள்ளாடுகளை பட்டிக்கு வெளியே கட்டி வைத்துள்ளாா்.
பின்னா் திங்கள்கிழமை அதிகாலை ஆடுகளின் அலறல் சப்தம் கேட்டு அங்கு சென்று பாா்த்தபோது, ஒரு வெள்ளாடு கடிபட்ட காயங்களுடன் இறந்துகிடந்தது. மற்றொரு வெள்ளாடு காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. நரி கடித்துக் கொன்றிருக்கலாம் என செல்வராஜ் தெரிவித்தாா்.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் வனத் துறை அதிகாரி ஷேக்உமா், வனவா் சரவணன், வெள்ளக்கோவில் அரசு கால்நடை மருத்துவா், சேனாபதிபாளையம் கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
அப்போது நரி வந்ததற்கான அடையாளம் இல்லை. நாய்கள் ஆட்டை கடித்திருக்கலாம் என வனத் துறையினா் தெரிவித்தனா்.