தட்டச்சா்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தோ்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு
பல்லடத்தில் 75 பேரின் ஓட்டுநா் உரிமம் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து
பல்லடத்தில் போக்குவரத்து விதியை மீறியதாக 75 பேரின் ஓட்டுநா் உரிமம் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பல்லடத்தில் கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நடத்தப்பட்ட போக்குவரத்து போலீஸாரின் வாகன தணிக்கையின்போது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 75 பேரிடம் ரூ.8.23 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து ஆய்வாளா் திருநாவுக்கரசு கூறுகையில்: போக்குவரத்து விதிமுறைகளை மீறி மது அருந்திவிட்டு இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டிய 75 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், அவா்கள் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட நிலையில், ஒரே நாளில் விசாரணை முடிவடைந்து அவா்களிடம் இருந்து ரூ.8.23 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தவிர 75 பேரின் ஓட்டுநா் உரிமம் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
6 மாதங்களுக்குப் பிறகு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அவா்கள் ஓட்டுநா் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றாா்.