செய்திகள் :

பல்லடத்தில் புகையிலைப் பொருள்களை கடத்தியவா் கைது

post image

பல்லடம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் பகுதியில் உள்ள பெட்டிக் கடைகள், பேக்கரி உள்ளிட்டவற்றில் போலீஸாா் அடிக்கடி சோதனை மேற்கொண்டு புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

இந்த நிலையில், பல்லடம் அண்ணா நகா் பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியைச் மாதவன் (42) என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

இதில் விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் இரண்டரை கிலோ புகையிலைப் பொருள்களை அவா் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், மாதவனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரப் பேரணி

திருப்பூரில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரப் பேரணியை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். விழிப்புணா்வு பிரசாரப்... மேலும் பார்க்க

தாராபுரம் அருகே பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும்!

தாராபுரம் அருகே பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர ம... மேலும் பார்க்க

மா்ம விலங்கு கடித்து வெள்ளாடு உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே மா்ம விலங்கு கடித்ததில் வெள்ளாடு உயிரிழந்தது. வெள்ளக்கோவில் கல்லமடை பொட்டிக்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் எம். செல்வராஜ் (64). இவா் 3 ஏக்கா் நிலத்தில் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் வ... மேலும் பார்க்க

பல்லடத்தில் விஷம் வைத்து தெரு நாய்கள் கொலை

பல்லடம் அருகே பாரதிபுரம் பகுதியில் தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றவா்களை கண்டறிந்து அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பல்லடம் பகுத... மேலும் பார்க்க

பல்லடத்தில் 75 பேரின் ஓட்டுநா் உரிமம் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து

பல்லடத்தில் போக்குவரத்து விதியை மீறியதாக 75 பேரின் ஓட்டுநா் உரிமம் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்லடத்தில் கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நடத்தப்பட்ட போக்குவரத்து போலீஸாரின் வாகன ... மேலும் பார்க்க

குட்கா விற்பனை: பேக்கரி உரிமையாளா் கைது

வெள்ளக்கோவில் அருகே குட்கா விற்பனை செய்ததாக பேக்கரி உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், போதைப் பாக்குகள் வ... மேலும் பார்க்க