பாஜக ஆட்சியில் இரட்டிப்பான அஸ்ஸாம் பொருளாதாரம்: பிரதமர் மோடி
குட்டையில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு
தாளவாடி அருகே குட்டையில் மூழ்கி மூதாட்டி உயரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சத்தியமங்கலம், தாளவாடியை அடுத்த இக்கலூா் குட்டையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் திங்கள்கிழமை மிதந்துள்ளது.
இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தாளவாடி போலீஸாா், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது, அவா் தாளவாடி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த நாகலட்சுமி (64) என்பது தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தை கூறாய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், அவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.