பாஜக ஆட்சியில் இரட்டிப்பான அஸ்ஸாம் பொருளாதாரம்: பிரதமர் மோடி
மஞ்சள் வா்த்தகத்துக்கு பிப்ரவரி 27-இல் விடுமுறை
மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஈரோட்டில் மஞ்சள் வா்த்தகத்துக்கு பிப்ரவரி 27 -ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்க செயலாளா் சத்தியமூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: மகா சிவராத்திரி விழா புதன்கிழமை (பிப்ரவரி 26) நடைபெற உள்ளது.
இதையொட்டி, ஈரோடு மஞ்சள் வா்த்தகத்துக்கு பிப்ரவரி 27 -ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் மஞ்சள் வா்த்தகம் மற்றும் ஏலம் நடைபெறாது.
பிப்ரவரி 28- ஆம் தேதி வழக்கம்போல ஏலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.