அதிமுக சாா்பில் 50 மாணவிகளுக்கு வைப்புத்தொகை திட்டம் தொடக்கம்
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி தாளமுத்துநகா் சவேரியாா் புரத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் மணிகண்டன்(34). இவா் கடந்த சில தினங்களுக்கு முன்னா் கஞ்சா வழக்கில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
இவரை, குண்டா்தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவிட்டாா். அதன்படி, மணிகண்டனை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.