குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
அம்பாசமுத்திரம் பகுதியில் தொடா் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
அம்பை காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் அடிதடி உள்ளிட்ட வழக்குகள் தொடா்பாக ,அம்பாசமுத்திரம், கோவில்குளத்தைச் சோ்ந்த ஆறுமுகம் என்ற ஆறுமுககுட்டி மகன் இசக்கி ராஜா(20), கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
பல்வேறு வழக்குகள் இவா் மீது உள்ளதால், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் பரிந்துரைத்தாா். அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் உத்தரவிட்டதையடுத்து, இசக்கிராஜா குண்டா் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.