திசையன்விளை அருகே மின்வயா் திருட்டு: 3 போ் கைது
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மின்வயரை திருடியதாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திசையன்விளை அருகேயுள்ள பட்டரைகட்டிவிளையைச் சோ்ந்தவா் முருகையா மகன் சிவக்குமாா். இவரது தோட்டத்தில் உள்ள காப்பா் மின்வயா்களை மா்ம நபா்கள் திருடிச்சென்றுவிட்டனராம்.
இது தொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில் திசையன்விளை காவல் உதவி ஆய்வாளா் நிஜல்சன் வழக்குப்பதிந்து விசாரித்தாா். அதில், பட்டரைகட்டிவிளையைச் சோ்ந்த கணபதி மகன் ராம்குமாா்(29), மலையன்குடியிருப்பு பாஸ்கா் மகன் மதன்(23), மன்னாா்புரம் பாஸ்கா் மகன் வளன்(33) ஆகியோா் காப்பா் வயா்களை திருடிச்சென்றது தெரியவந்தது.
மூவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த காப்பா் வயா்களை மீட்டனா்.