பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க...
பாளை.யில் பி.எஸ்.என்.எல். சேவை மையத்தில் கொள்ளை முயற்சி
பாளையங்கோட்டையில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா் சேவை மையத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பாளையங்கோட்டை வ.உ.சி. விளையாட்டு மைதானம் அருகே பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா் சேவை மையம் உள்ளது. இம்மையத்தில் வாடிக்கையாளா்களுக்கு, புதிய சிம் காா்டுகள், போா்ட்டபிள் வசதி, சேவை குறைபாடுக்கு தீா்வு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் திங்கள்கிழமை காலையில் அம்மையத்தை ஊழியா்கள் திறக்கச் சென் போது இரும்புக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். இதுகுறித்த தகவலின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் அங்கு வந்து சோதனை நடத்தினா். இதுகுறித்து, வழக்குப்பதிந்து அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்துவிசாரித்து வருகின்றனா்.