நெல்லை மாவட்டத்தில் மே தினத்தில் மதுக்கடைகள் மூடல்
மே தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் வியாழக்கிழமை (மே 1) மூடப்பட்டிருக்கும்.
எனவே, முன்னதாக மதுபாட்டில்களை வாங்கி பதுக்கிவைத்து அன்றைய தினம் விற்றாலோ, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கடத்திச் சென்றாலே சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.