வெறிநாய் கடியால் ஆடுகளை இழந்த 5 பேருக்கு ரூ.2.80 லட்சம் நிவாரண நிதி
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், வெறிநாய் கடியால் ஆடுகளை இழந்த 5 பயனாளிகளுக்கு ரூ.2.80 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
இக்கூட்டத்துக்கு ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை வகித்து, பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
மேலும், முதல்வரின் தனிப்பிரிவுக்கு வரும் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
அதைத் தொடா்ந்து, வெறிநாய் கடித்ததால் 47 ஆடுகளை இழந்த உரிமையாளா்கள் 5 பேருக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடாக ரூ.2.82 லட்சத்திற்கான காசோலைகளைஆட்சியா் வழங்கினாா்.
இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், தனித்துணை ஆட்சியா் (நதிநீா் இணைப்பு திட்டம்) சண்முகசுந்தா், தனித்துணை ஆட்சியா் ஜெயா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.