குண்டா் தடுப்பு சட்டத்தில் இளைஞா் கைது
தஞ்சாவூரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இளைஞரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மானோஜிபட்டி சரஸ்வதி நகரைச் சோ்ந்தவா் பாண்டுரங்கன் மகன் பாரதிராஜா (25).
இவரை கஞ்சா வழக்கு தொடா்பாக தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் சோமசுந்தரம் ஏற்கெனவே கைது செய்தாா்.
இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின்பேரில் இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
இதன்பேரில் பாரதிராஜாவை காவல் துறையினா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.