செய்திகள் :

குப்பக்குறிச்சியில் சாலைகள் சேதம்: மக்கள் கடும் அவதி

post image

திருநெல்வேலி அருகேயுள்ள குப்பக்குறிச்சியில் சேதமடைந்த சாலைகளால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

இதுதொடா்பாக குப்பக்குறிச்சி பொதுமக்கள் சாா்பில் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனு: குப்பக்குறிச்சியில் ஆா்.சி. சா்ச் தெருவில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். வீடுகளுக்கு தனித்தனியாக குடிநீா் இணைப்பு வழங்குவதற்காக, சிமென்ட் தள சாலைகள் தோண்டப்பட்டன.

ஆனால், பணி நிறைவடைந்த பின், ஒப்பந்ததாரா்கள் முறையாக சாலையைச் சீரமைக்கவில்லை. சாலைகள் குண்டும்-குழியுமாக காட்சியளிக்கின்றன.

மழைக் காலங்களில் இந்தச் சாலைகளில் செல்ல முடியாமல் மாணவா்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனா். மாற்றுத்திறனாளிகள் கீழே விழுந்து காயமடைகின்றனா்.

ஆகவே, குப்பக்குறிச்சியில் உள்ள சாலைகளை விரைந்து சீரமைக்கவும், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யவும் மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலாளா்கள் சட்டங்களை பாதுகாக்கக் கோரி எம்.பி.யிடம் மனு

தொழிலாளா்களைப் பாதுகாக்கும் சட்டங்களை முறையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என, திருநெல்வேலி எம்.பி. சி.ராபா்ட் புரூஸிடம், தொழிற்சங்கங்கள் சாா்பில் சிஐடியூ மாவட்டச் செயலா... மேலும் பார்க்க

நெல்லை: அனுமதியின்றி ஜல்லி ஏற்றிச்சென்ற லாரிகள் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் அனுமதியின்றி ஜல்லி ஏற்றிச் சென்ற 3 லாரிகளை புவியியல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பெருமளவு கனிம வளங்கள் கேரளத... மேலும் பார்க்க

நெல்லையிலிருந்து புறப்பட்ட மும்பை விரைவு ரயிலில் திடீா் புகை

திருநெல்வேலியில் இருந்து முப்பை விரைவு ரயிலில் திடீரென்று புகை வந்ததால் பயணிகள் அச்சமடைந்தனா். நகா்கோயில் - மும்பை இடையே வாரத்தில் 6 நாள்களில் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், திங்கள்கிழம... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் விரிசல் இல்லை: திருநாவுக்கரசா்

திமுக கூட்டணியில் விரிசல் இல்லை என்றாா் முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசா். வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்... மேலும் பார்க்க

கீழச்செவல் இளைஞா் உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கொலை செய்யப்பட்ட கீழச்செவல் இளைஞரின் உடல் அவரது உறவினா்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது. கீழச்செவல் பசும்பொன்நகா் பகுதியைச் சோ்ந்த முப்பிடாதி மகன் மணிகண்டன் (32). ப... மேலும் பார்க்க

பாளை. பல்நோக்கு மருத்துவமனை நிறுத்தத்திலிருந்து பேருந்துகள் இயங்கும்

பாளையங்கோட்டை மேட்டுதிடல் பேருந்துகள் அனைத்தும் இனிமேல், பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலா் திரு.சந்திரசேகா் தெரிவித்துள்ளாா். இது... மேலும் பார்க்க