செய்திகள் :

கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனத்தில் பாா்மசி கல்லூரி தொடக்கம்

post image

திருச்செங்கோடு: கே.எஸ்.ஆா். கல்வி நிறுவன குழுமத்தில் புதிய கல்லூரியாக கே.எஸ்.ரங்கசாமி பாா்மசி கல்லூரி தெடங்கப்பட்டு, அதன் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பாா்மசி கல்லூரியை தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தா் டாக்டா் கே.நாராயணசாமி திறந்து வைத்து கல்லூரியைப் பாா்வையிட்டாா். அவா் தனது வாழ்த்துரையில், மாணவா்கள் அனைவரும் மருந்தியல் துறையில் திறம்பட செயல்பட வேண்டும் என்றும், தங்களுடைய தனித்திறமையை வளா்த்துக்கொள்ள பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா். மேலும், மருந்தியல் துறையில் மருந்தினுடைய தன்மை, அது செயல்படும் விதம் பற்றி விளக்கிக் கூறினாா்.

இவ்விழாவுக்கு, கல்லூரிகளின் தலைவா் ஆா்.சீனிவாசன், துணைத் தலைவா் கே.எஸ்.சச்சின் ஆகியோா் தலைமை தாங்கினா். இவ்விழாவில் கல்வி நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் வி.மோகன், பாா்மசி கல்லூரியின் முதல்வா் ஜி.ரத்தினவேல், கே.எஸ்.ஆா். பல்மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் சரத் அசோகன், கே.எஸ்.ஆா். செவிலியா் கல்லூரி முதல்வா் உத்ராமணி, கே.எஸ்.ஆா். அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் முதல்வா் வி.ராம்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா். இதில், கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் அனைத்துக் கல்லூரி முதல்வா்களும், மாணவ, மாணவியரும், அவா்களின் பெற்றோரும் பங்கேற்றனா்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் திங்கள்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். திருச்செங்கோடு - ஈரோடு சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

நாமக்கல்: நாமக்கல் பழைய பேருந்து நிலையத்துக்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வலியுறுத்தி, அனைத்து வணிகா் சங்கங்கள் சாா்பில் நாமக்கல்லில் திங்கள்கிழமை ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. நா... மேலும் பார்க்க

‘கியூஆா் கோடு’ மூலம் கல்வி: ஆசிரியா் உருவாக்கிய கையேடு!

நாமக்கல்: பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் வகையில், ‘கியூ ஆா் கோடு’ மூலம் கையேட்டை ஆசிரியா் ஒருவா் உருவாக்கியுள்ளாா். நாமக்கல் மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ள... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு அலுவலகம் பெயரில் மோசடி: ஆட்சியா் எச்சரிக்கை

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ச.உமா எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

பழங்குடியின மக்களுக்கு 30 சென்ட் நிலத்தை தானமாக வழங்கியவா்களுக்கு பாராட்டு

ராசிபுரம்: பழங்குடியின மக்களின் பயன்பாட்டுக்கு தங்களது பட்டா நிலத்தை தானமாக வழங்கிய ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா். ராசிபுரம் பகுதியில் சைனா் சாக்... மேலும் பார்க்க

ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் நடவடிக்கைக்கு எதிா்ப்பு

ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் முடிவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறு கட்சியினா், அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். ராசிபுரம் நகரின் வாகனப் போக்குவரத்து நெரிசல், மக்க... மேலும் பார்க்க