கேரளம்: பட்டப்பகலில் கத்தி முனையில் வங்கி கொள்ளை
கேரளத்தில் பட்டப்பகலில் கத்தி முனையில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், சாலக்குடி அருகே வங்கி ஒன்றில் வெள்ளிக்கிழமை நுழைந்த நபர் ஒருவர் கத்தி முனையில் கொள்ளையடித்து, ஏராளமான பணத்துடன் தப்பிச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
சாலக்குடி காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கொள்ளைச் சம்பவம் குறித்து அவசர கால எண்ணில் இருந்து (ஈஆர்எஸ்எஸ்) பிற்பகல் தங்களுக்கு அழைப்பு வந்தது.
பிரேசில்: பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் வெடித்ததில் பெண் காயம்
சாலக்குடி அருகே உள்ள பொட்டாவில் உள்ள வங்கிக் கிளைக்கு உடனடியாக ஒரு குழு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொள்ளையடிக்கப்பட்ட சரியான தொகை மற்றும் கொள்ளையனின் அடையாளம் இன்னும் தெரியவில்லை.
சந்தேக நபரை அடையாளம் காணவும், குற்றத்தைச் செய்த பின்னர் அவர் எந்த திசையில் தப்பி ஓடினார் என்பது குறித்து விவரங்களை போலீஸ் குழு சேகரிப்பதோடு சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருவதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.