செய்திகள் :

கேரளா: `மலரிக்கல்' ஆச்சர்ய கிராமம்; சுற்றுலா பயணிகள் விரும்புவது ஏன்?

post image

God's Own Country என்று அழைக்கப்படும் கேரளா, பலரின் விருப்பமான சுற்றுலா தலமாக உள்ளது. கேரளாவில் பாரம்பரிய இடங்கள் முதல் அட்வென்ச்சர் ஸ்பாட்ஸ் வரை பார்ப்பதற்கு பல இடங்கள் உள்ளன.

இயற்கை ஆர்வலர்கள் பெரிதும் விரும்பக்கூடிய இடமாக இந்த கேரளா இருப்பதற்கு மற்றொரு முக்கியக் காரணம், குறைந்த பட்ஜெட்டிலேயே நிறைய இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம்.

பலரும், நகரப்புறத்தில் சலசலப்பில் இருந்தும் பிரபலமான அல்லது கூட்டம் இல்லாத இடத்தில் இருந்தும் விலகி ஓர் இயற்கையான, அமைதியான இடத்திற்கு ஏங்குகிறீர்கள் என்றால் கேரளாவில் இருக்கும் இந்த ரகசிய இடத்தைப் பற்றி சொல்ல போகிறோம்.

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள ஒரு குக்கிராமம், பிற மாநில சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. மலரிக்கல் என்ற இந்த கிராமம் கவர்ச்சியான காட்சிகளால் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.

அதாவது அல்லி மலர்களால் உயிர்ப்பிக்கும் இந்த கிராமத்தைக் காண பலரும் இங்கு குவிக்கின்றனர். ஒவ்வொரு டிசம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இளஞ்சிவப்பு, வெள்ளை நீர் அல்லிகள் 650 ஏக்கர் வயல்களில் மலர்ந்திருக்கும் இவற்றைக் காண பலரும் இங்கு வருகை தருகின்றன.

சுற்றுலாப் பயணிகள் சிறிய படகு மூலம் நூறு ரூபாய் கொடுத்து இந்த இடத்தை பார்வையிடலாம். இந்த இடம் தனிப்பட்ட சொத்து என்பதால் அனுமதி இல்லாமல் நுழைய முடியாது.

இந்தப் அல்லிகளை காண தான் சுற்றுலா பயணிகள் வருகிறார்களா என்று கேட்டால், சூரியன் உதிக்கும் போது பூக்கும் அல்லிகளின் இந்த வயல் கண்கொள்ளாக் காட்சியாக எடுப்பதுதான் பலரின் விரும்பத் தகுந்த இடமாக மாறியது.

இதற்கு முன்பு இந்த இந்த, உலகம் அறியாமல் இருந்தது, சில சுற்றுலா பயணிகள் இந்த இடத்தின் புகைப்படங்களை சமூகவலை தளங்களில் வெளியிட்ட பிறகு மாநிலம் முழுவதிலுமிருந்து மக்களை ஈர்த்து வருகிறது.

கொச்சி, ஆலப்புழா, திருவனந்தபுரம், மூணாறு ஆகியவை கேரளாவில் பார்க்க வேண்டிய மிகவும் பிரபலமான இடங்களாக இருந்தாலும், கோட்டயத்தின் இந்த அழகிய கிராமத்தை நிச்சயம் பார்வையிட வேண்டும்!

Travel Contest : யானையா, யானைக்கூட்டமா? - வெள்ளியங்கிரி மலையில் ஏற்பட்ட திக் திக் சிரிப்பனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel contest: `இது சந்தோச பூமி’ - பயங்களை மீறி காஷ்மீர் சென்று வந்த அனுபவம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: "ஆண்டுக்கு 75 முறை மின்னல் தாக்கும்" - காற்றில் அசையும் டவர்; கனடா சுற்றுலா அனுபவம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest : பாண்டி டு பாரீஸ்! - நடைமுறை என்ன? சுத்தி பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: ரயில் பயணத்தில் உங்களுக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் செய்யலாம்.. எப்படி?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: "நீங்க தமிழ்நாடா?" - தெற்கு கர்நாடகா கோயில் தரிசன சுற்றுலா அனுபவம்