செய்திகள் :

கைதுக்கு எதிராக ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

post image

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண விவகாரத்தில் திருமணம் செய்துகொண்ட இளைஞரின் சகோதரரான 17 வயது சிறுவனை கடத்திய வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு உள்ளதாக புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து நேற்றைய விசாரணையில் ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமுக்கு தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டதால் அவரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி, ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காடு காவல் நிலையத்தில் இன்று ஏடிஜிபி ஜெயராமிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்ந்து ஜெயராமை பணியிடை நீக்கம் செய்து தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக தன் மீதான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஏடிஜிபி ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த வழக்கை உச்சநீதிமன்றம் நாளை(ஜூன் 18) விசாரிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை பெய்யும்!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, கோவை உள்பட 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (செவ்வாய்க்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதா... மேலும் பார்க்க

வார விடுமுறை நாள்கள்: நெல்லைக்கு சிறப்பு ரயில்!

சென்னையில் இருந்து நெல்லைக்கு வரும் ஜூன் 21 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.வார விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்ட நெரிசலை கட்டுப்ப... மேலும் பார்க்க

எய்ம்ஸ் குறித்து கேள்வி கேட்டதால் கற்பனை காட்சிகள் வெளியீடு: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்னவானது என்று கேள்வி கேட்டதால், கற்பனை காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.மதுரை வந்த உள்துறை அமைச்சரிடம், எய்ம்ஸ் என்னவா... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிட மாற்றம்!

மத்திய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா தில்லியில் இருந்து நொய்டாவுக்கு பணியிட மாற்றம் செய்து மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழின், தமிழர்களின் தொன்மை பற்றிய கீழடி அகழாய்வின் அ... மேலும் பார்க்க

நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதா வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், நேற்று வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்... மேலும் பார்க்க

சென்னையில் 2 நாள்களுக்கு மழை தொடரும்!

சென்னையில் 2 நாள்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது.குஜராத் ம... மேலும் பார்க்க