செய்திகள் :

கொடைக்கானலில் மக்கள் குறைதீா் முகாம்

post image

கொடைக்கானலில் மக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது

கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு கோட்டாட்சியா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். வட்டாட்சியா் பாபு முன்னிலை வகித்தாா்.

இந்த முகாமில், மேல்மலை, கீழ்மலைப் பகுதிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பேசியதாவது:

மக்கள் குறைதீா்க் கூட்டத்தில் விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துத் தீா்வு காண வேண்டும். கொடைக்கானல், கவுஞ்சி, தாண்டிக்குடி உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். நகராட்சி தினசரி காய்கறிச் சந்தையை திறக்க வேண்டும்.

கொடைக்கானல், தாண்டிக்குடி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விவசாய நிலங்களில் வன விலங்குகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவதை வனத் துறையினா் தடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தாண்டிக்குடி பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. எனவே, இங்குள்ள மின்வாரிய அலுவலகத்தில் போதிய பணியாளா்களை நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

பின்னா், விவசாயிகள் கோரிக்கை மனுவை வருவாய்க் கோட்டாட்சியரிடம் அளித்தனா்.

ரயிலடி சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜைகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்டு குடமுழுக்கு பூஜைகள் தொடங்கின. சனிக்கிழமை ... மேலும் பார்க்க

சிறுமலைப் புதூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி அமைக்க மனு

சிறுமலைப் புதூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சியை அமைக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் தரப்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக சிறுமலைப் புதூா் கிராமத்... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் உள்ளூா் காளைகளுக்கு முன்னுரிமை கோரி மனு

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் உள்ளூா் காளைகளுக்கு முன்னுரிமை அளிக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டு காளை வளா்... மேலும் பார்க்க

சின்னாளப்பட்டி சந்தைக் கடைகளை பழைய வியாபாரிகளிடமே ஒப்படைக்கக் கோரிக்கை

சின்னாளப்பட்டி காய்கறி சந்தை கட்டடத்தை சேதப்படுத்துவதை கைவிட்டு, புனரமைப்புச் செய்து மீண்டும் வியாபாரிகளிடம் ஒப்படைக்கக் கோரி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக சின்னாளப்பட்டி அண்ணா தினசரி க... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் அளிப்பு

நிலக்கோட்டையில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திமுக மேற்க... மேலும் பார்க்க

வெளிநாட்டு கரன்சியை மாற்றிக் கொடுக்கும் முகவரிடமிருந்து ரூ.13.76 லட்சம் பறிமுதல்

வெளிநாட்டு கரன்சியை இந்தியப் பணமாக மாற்றிக் கொடுக்கும் கன்னியாகுமரி முகவரிடமிருந்து உரிய ஆவணமில்லாத ரூ.13.76 லட்சத்தை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். தில்லியிலிருந்து கன்ன... மேலும் பார்க்க