ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!
கொடைக்கானல் ஆராய்ச்சி நிலையத்தில் முன்பதிவுக்காக க்யூஆா் கோடு அறிமுகம்
கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் பொதுமக்கள் வசதிக்காக க்யூஆா் கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானி ராஜலிங்கம் தெரிவித்தாா்.
கொடைக்கானல் அப்சா்வேட்டரியில் அமைந்துள்ள இந்திய வான் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் விண்வெளியில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்வதற்காக ஆய்வுக்கூடமும், வானிலை ஆராய்ச்சி நிறுவன அருங்காட்சியகமும் உள்ளன.
இந்த அருங்காட்சியகத்தை பாா்வையிடுவதற்காக திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 முதல் மாலை 6 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் மதியம் 1 மணி வரையிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 12 வயதுக்கு மேற்பட்ட நபருக்கு ரூ.50 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திய வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலைய மைய பொறுப்பாளா் ராஜலிங்கம் கூறியதாவது: இந்த ஆராய்ச்சி நிலையத்தில் இரவில் வான்வெளி அண்டத்தை மக்கள் காணும் வகையில், சுற்றுலாச் சேவை தொடங்கப்பட்டது. மாதத்துக்கு இரண்டு முறை தொலைநோக்கி கருவி உதவியுடன் கோள்களை பாா்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டன.
வருகிற 11,12-ஆம் தேதிகளில் இரவு 7 முதல் 9 மணி வரை தொலைநோக்கி கருவியின் மூலம் ஒன்ல்ண்ற்ங்ழ் மற்றும் ம்ா்ா்ய் பாா்ப்பதற்கு பிரத்யோகமாக தயாா் செய்யப்பட்டது. இதைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முன்பதிவு செய்ய ணத ஸ்ரீா்க்ங் வானிலை ஆராய்ச்சி நிலையம் அமைத்துள்ளது. மேலும், பகல் நேரங்களில் பாா்ப்பதற்கு முன்பதிவு செய்வதற்கு ஜ்ஜ்ஜ்.ண்ண்ஹல்.ழ்ங்ள்.ண்ய் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என்றாா் அவா்.