செய்திகள் :

'கொலம்பியா முதல் மெக்சிகோ வரை' - ட்ரம்பின் வரிவிதிப்பு போரின் விளைவுகள் என்ன?

post image

முதல்முறையாக அமெரிக்க அதிபராக தான் இருந்த காலக்கட்டத்தில் அதிரடியான வரிவிதிப்புகளின் மூலம் பல்வேறு நாடுகளுக்கு அதிர்ச்சிவைத்தியம் கொடுத்தார், ட்ரம்ப். இறக்குமதி செய்யப்படும் வாஷிங் மெஷின், சோலார் பேனல்களுக்கு 50%, எஃகு மீது 25%, அலுமினியத்துக்கு 10% வரியை' விதித்தார். இதில் கடுப்பான ஐரோப்பிய ஒன்றியம், ஜீன்ஸ், போர்பன் விஸ்கி, ஹார்லி டேவிட்சன் பைக் போன்ற அமெரிக்க ஏற்றுமதிப் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதித்து பதிலடி கொடுத்தது. இதேபோல் சீனாவுடனும் மோதல் போக்கை கடைபிடித்தார். இந்த சூழலில்தான் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றிருக்கிறார், ட்ரம்ப்.

வெள்ளை மாளிகை | ட்ரம்ப்

சமீபத்தில் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "பிப்ரவரி 1 முதல் கனடா, மெக்சிகோவிலிருந்து வரும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும். இதன் மூலம் சம்மந்தப்பட்ட நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவது தடுக்கப்படும். கூடவே ஃபென்டனயில் போதைப்பொருள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்க முடியும். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படும்" என அறிவித்தார். அமெரிக்காவுக்கு அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. ட்ரம்பின் இந்த அறிவிப்பின் காரணமாக சம்பத்தப்பட்ட நாடுகளின் பொருளாதாரங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

இதற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். அது பிப்ரவரி 1-ம் தேதி அல்லது பிப்ரவரி 15-ம் தேதி காதலர் தின பரிசாக இருந்தாலும் சரி அல்லது ஏப்ரல் 1-ம் தேதியோ அல்லது எப்பொழுதோ கனடா நிச்சயம் பதிலடி கொடுக்கும். அவர் அதை விரும்புகிறார் என்று நாங்கள் நினைக்கவில்லை. அதற்கான திட்டத்தை கனடா அரசு தயார் நிலையில் வைத்திருக்கிறது. கனடா பொருட்களுக்கு அதிக வரி விதிக்க ட்ரம்ப் முடிவு செய்யும் போதெல்லாம் அமெரிக்க நுகர்வோர் அதிக பணம் செலுத்துவார்கள்" என்றார்.

இதேபோல் சீனாவின் வெளியுறவு அமைச்சகம், "தேசிய நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்றார். இதனால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தனது முடிவிலிருந்து ட்ரம்ப் பின்வாங்கவில்லை.

ஜஸ்டின் ட்ரூடோ

தனது முதல்கட்ட நடவடிக்கையாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய கொலம்பியர்களை மீண்டும் சொந்த நாட்டுக்கே அனுப்ப உத்தரவிட்டார், ட்ரம்ப். இதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய கொலம்பியர்களை ராணுவம் கைது செய்தது. பிறகு அவர்கள் இரண்டு ராணுவ விமானங்களில் கொலம்பியா அனுப்பப்பட்டனர். ஆனால் அமெரிக்காவின் விமானம் தங்களது நாட்டில் தரையிறங்க அந்த நாட்டின் அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அனுமதிக்கவில்லை. மேலும் அவர், "கொலம்பியா நாட்டவர்களை குற்றவாளிகளைப் போல அமெரிக்க நடத்தக்கூடாது" என கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த தகவல் ட்ரம்பிக்கு தெரிவிக்கப்பட்டதும் கோபத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டார், அவர். பிறகு அவர் வெளியிட்ட அறிவிப்பில், "அமெரிக்க விமானங்களை தரையிறங்க கொலம்பியா அனுமதி மறுத்துவிட்டது. எனவே அந்நாட்டின் மீது வரிகள் விதிக்கப்படும். அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும். ஒரு வாரத்தில் 50% அதிகரிக்கப்படும். கொலம்பியாவின் அரசியல் கட்சி உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், அவர்களின் நட்பு நாடுகள், ஆதரவாளர்கள் அமெரிக்காவிற்கு வருவதற்கு பயணத் தடை விதிக்கப்படும். மேலும் அவர்களின் விசாவும் உடனடியாக ரத்து செய்யப்படும். இத்துடன் இந்த விவகாரம் முடிந்துவிடாது. இது வெறும் தொடக்கம் மட்டும்தான்" என கொதித்தார். பதிலுக்கு, "அமெரிக்கா மீது 50% வரி விதிக்கப்படும்" என்றார், குஸ்டாவோ பெட்ரோ. இருநாடுகளுக்கும் இடையிலான இந்த மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கொலம்பிய அதிபர்

இந்தசூழலில் வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், "அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என கொலம்பியா அரசு தெரிவித்திருக்கிறது. எனவே அந்த நாட்டின் மீது வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவு தற்காலிகமாக கைவிடப்படுகிறது. ஒருவேளை கொலம்பியா அரசு தாங்கள் கூறியதை செய்யத் தவறும் பட்சத்தில் கடுமையான வரி விதிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு கொலம்பியா பின்வாங்கிவிட்டது என்கிறார்கள் சர்வதேச பொருளாதார வல்லுநர்கள். இதேபோல்தான் மெக்சிகோவுடனும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர், "அமெரிக்கா, மெக்சிகோ இடையிலான எல்லையில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தப்படும். மெக்சிகோ எல்லை வழியாக ஆயிரக்கணக்கான அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைகிறார்கள். அப்படி வருவோரை தடுப்பதற்குத்தான் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. விரைவில் தடுப்புச் சுவர் அமைக்கப்படும். மிக விரைவில் மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்காவின் வளைகுடா என்று மாற்றப் போகிறோம்" என்றார்.

இதற்கு பதிலடி கொடுத்த மெக்சிகோவின் பொருளாதார அமைச்சர் மார்செலோ எப்ரார்ட், "மெக்சிகோ வளைகுடா என்றுதான் தொடர்ந்து அழைக்கப்படும். இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்படும் என அவ்வப்போது சொல்வதற்கெல்லாம் தினமும் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சுமூகமாகத் தொடர வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம்" என்றார்.

அமெரிக்கா-மெக்சிகோ எல்லை

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் சர்வதேச அரசியல் நோக்கர்கள், "உலகின் மிக முக்கியமான எண்ணெய் உற்பத்திப் பகுதிகளில் இதுவும் ஒன்று. அமெரிக்காவின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 14% சதவீதம் அளவுக்கு இங்கிருந்துதான் கிடைக்கிறது. மறுபக்கம் இது மெக்சிகோவுக்கும் இது முக்கியமான ஒன்று. அவர்களின் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் ட்ரம்ப் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்குதான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்" என்கிறார்கள்.

இதற்கிடையில் அந்த நாட்டிலிருந்து சட்டவிரோதமாக குடியேறுவர்களை கைது செய்து ராணுவ விமானங்களின் மூலம் மீண்டும் மெக்சிகோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் இருநாடுகளுக்கும் இடையில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. விரைவில் மேலும் பல நாடுகளுடன் ட்ரம்பின் வரிவிதிப்பு போர் தொடங்கும். இது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் சர்வதேச பொருளாதார வல்லுநர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Canada - India Row: `நிஜ்ஜார் கொலை; உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை' - கனட அரசின் அறிக்கை சொல்வதென்ன?

கனடா - இந்தியா உறவில் விரிசல் விழக் காரணம் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு. கனடாவில் கொல்லப்பட்ட இவரின் கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்ச... மேலும் பார்க்க

Seeman : `பெரியாரை விமர்சித்த பெரிய கூலி கருணாநிதிதான்' - ஈரோட்டில் சீமான் காட்டம்

ஈரோட்டில் பெருமாள் மலைப் பகுதியில் வசிக்கும் மக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்... மேலும் பார்க்க

Arvind Kejriwal : `இது அமைதியைக் கெடுக்கும்...' - கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்!

டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கவிருக்கிறது. அதற்கான தீவிரப் பிரசாரத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ஆம்... மேலும் பார்க்க

``மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தியிருக்கிறார்கள்'' - வேங்கை வயல் மக்கள் சொல்வதென்ன?

`மூட்டைப் பூச்சிக்கு பயந்து..!' ”எங்கள் கையை வைத்து எங்கள் கண்ணையே குத்திக்கொள்வோமா?. நாங்களே மலத்தை அள்ளிப்போட்டுவிட்டு, அந்த தண்ணீரைக் குடிப்போமா?. ’பாவம் ஒரு பக்கம்... பழி ஒரு பக்கம்’ என்று காவல்து... மேலும் பார்க்க

Seeman: ``சிங்கள அரசு ஈழத்தில் செய்ததை சீமான் தமிழ்நாட்டில் செய்கிறார்' - ஈழத்தமிழர் சபேசன் பேட்டி

சமீபகாலமாக தமிழகத்தில் பெரியார் குறித்த உரையாடல் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர் vs பெரியார் என்று உரையாடல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க பெரியாரை ஈழத்தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும்... மேலும் பார்க்க

கழுகார்: `தவெக: மோதல்கள்... பேரங்கள்... குழப்படிகள் டு பசைப்பழக்கம்; புலம்பலில் குக்கர் விரும்பிகள்’

சட்டை செய்யாத நிர்வாகிகள்!பிடியை இழந்த மாஜி...“மான்செஸ்டர் மாவட்டத்தில், இலைக் கட்சி மாஜி செய்த திருவிளையாடலால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. இதனால், மாவட்டக்... மேலும் பார்க்க