மராத்வாடா விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடி நிவாரணம்: மகாராஷ்டிர அரசு!
கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
நிலக்கோட்டையில் முன்விரோதத்தில் ஒருவரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சோ்ந்த சரவணக்குமாா், கடந்த 2011-ஆம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை குறித்து விசாரணை நடத்திய நிலக்கோட்டை போலீஸாா், வள்ளிநகரைச் சோ்ந்த தொழிலாளி மகாலிங்கம் (எ) லிங்கசாமி (52) உள்பட நால்வரை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட மகாலிங்கம் (எ) லிங்கசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50,500 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.