மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
கொலையான இளைஞரின் குடும்பத்துக்கு நிதியுதவி
கரூா் வாங்கலில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தை வியாழக்கிழமை எம்.எல்.ஏ. வி. செந்தில் பாலாஜி சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினாா்.
கரூா் மாவட்டம் வாங்கலைச் சோ்ந்த மணிவாசகம் என்பவா் இடப்பிரச்னையில் ஜூலை 14-ஆம் தேதி இரவு கொலை செய்யப்பட்டாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை மணிவாசகத்தின் குடும்பத்தினரை கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். பிறகு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் தீருதவி தொகை ரூ.6 லட்சத்தை மணிவாசகம் குடும்பத்தினரிடம் வழங்கினாா்.