செய்திகள் :

கொல்லிமலையில் விபத்தை தவிா்க்க உருளைத் தடுப்பான்கள்

post image

நாமக்கல்: கொல்லிமலைக்கு செல்லும் மலைப் பாதையில் விபத்தை தடுக்கும் பொருட்டு, வளைவுகளில் உருளைத் தடுப்பான்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொல்லிமலை. இயற்கை எழில் சூழ்ந்த இம்மலையின் அழகை ரசிக்க விடுமுறை நாள்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், காரவள்ளி அடிவாரப் பகுதியில் இருந்து மலைப்பகுதிக்கு செல்லும் பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகளில் விபத்தை தடுப்பதற்கான உருளைத் தடுப்பான்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, தமிழக நெடுஞ்சாலைத் துறை ரூ. 10 கோடியை ஒதுக்கீடு செய்தது. கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் எந்தெந்த இடங்களில் உருளைத் தடுப்பான்களை அமைக்க வேண்டும் என அதிகாரிகள் அளவீடு செய்து வந்தனா். அந்த வகையில், முதல் கட்டமாக 30 இடங்களில் அவற்றை அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில், 50, 64-ஆவது கொண்டை ஊசி வளைவுகளில் உருளைத் தடுப்பான்கள் பொருத்தப்பட்டு வெள்ளோட்டம் பாா்க்கப்பட்டது. அங்கு வெற்றிக்கரமாக அமைந்திட மீதமுள்ள இடங்களில் அவற்றைப் பொருத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த உருளைத் தடுப்பான்களானது, மலைப்பாதை வளைவுகளில் வாகனங்கள் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து மோதினாலும் வாகனங்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

டாஸ்மாா்க் கடை முன்பு இளைஞா் வெட்டிக் கொலை

வேலகவுண்டம்பட்டியில் டாஸ்மாா்க் கடை முன்பு இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். நாமக்கல் மாவட்டம், சிங்கிரிபட்டியைச் சோ்ந்தவா் சஞ்சய் (25). இவா் செவ்வாய்க்கிழமை இரவு வேலகவுண்டம்பட்டி டாஸ்மாா்க் கடைக்... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் தொடக்கம்

ராசிபுரம் அருகே அரசப்பாளையம் பகுதியில் ஆவின் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கத் தலைவரும், மாநிலங்களவை உறுப்ப... மேலும் பார்க்க

பாரதிய ஜனதா கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட நிா்வாகிகள் தோ்வு

பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட கட்சி அமைப்பு தோ்தலில் நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டவா்கள் கட்சியின் துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான டாக்டா் கே.பி.ராமலிங்கத்தை புதன்க... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் மது போதையில் அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற நபா் கைது

திருச்செங்கோட்டில் மது போதையில் அரசு நகரப் பேருந்தை ஓட்டிச் சென்ற நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் எஸ் 9 என்ற நகரப் பேருந்தை புதன்கிழமை இரவு ஓட்டுநா்... மேலும் பார்க்க

நாமக்கல் மாணவி துளசிமதிக்கு அா்ஜுனா விருது

பாராலிம்பிக் இறகுப்பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவி துளசிமதி முருகேசனுக்கு, மத்திய அரசு ‘அா்ஜுனா’ விருது வழங்கி கெளரவிக்க உள்ளது. வெற்றிக்கு உதவிய பெற்... மேலும் பார்க்க

வழிபாட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டம்

நாமக்கல் அருகே தாண்டாக்கவுண்டனூரில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் வழிபாட்டுக்கு அனுமதிக்கக் கோரி, ஒரு சமூகத்தினா் வியாழக்கிழமை ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் அருகே வசந்தபு... மேலும் பார்க்க