செய்திகள் :

கோனோமா: பூட்டும் இல்லை.. திருட்டும் இல்லை.. இந்தியாவின் தனித்துவமான கிராமம் பற்றி தெரியுமா?

post image

நாகலாந்தின் ஒரு தனித்துவமான கிராமத்தைப் பற்றிதான் இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம்.

நாகாலாந்தின் தலைநகரான கோஹிமாவிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ”கோனோமா கிராமம்” குறித்து பயண வலைப்பதிவர் ஒருவர் சமீபத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் இருக்கும் விஷயங்கள்தான் தற்போது இணையவாசிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.

நாகலாந்தின் கோனோமா கிராமம், மற்ற கிராமங்களைப் போன்று இல்லாமல் இந்த சிறிய கிராமம் தனித்துவமான விஷயங்களால் கவனம் ஈர்க்கப்பட்டு வருகிறது.

கிராமத்தில் இருப்பவர்கள் தங்களது வீடுகளை பூட்டுவதில்லை கடைகளில் கடைக்காரர்கள் இல்லை, ஆனாலும் எதுவும் காணாமல் போவதில்லை இங்கு அனைத்தும் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குகின்றன.

பயண வலைப்பதிவரின் வீடியோவில் இருப்பதன் படி, அந்த கிராமத்தில் இருக்கும் ஒரு புத்தகக் கடையில், கடைக்காரர் இல்லை ஆனால் கடை செயல்படுகிறது. அதற்கு பக்கத்திலேயே ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் அந்த பொருளை வாங்கி செல்கிறார்கள்.

அதேபோன்று காய்கறி கடைக்குள் சென்ற தேவையான பொருட்கள் எடுத்து ஒரு சிறிய பெட்டியில் பணத்தை போடுகிறார்கள். அப்படி இங்கு நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த கிராமத்தின் சில விஷயங்கள் செயல்படுகின்றன.

பயண வலைப்பதிவர் கூற்றுப்படி, கென்யா எனப்படும் அங்கமி பழங்குடியினர் பின்பற்றும் சில பாரம்பரிய நெறிமுறைகள் இங்கு உள்ளன. இதன்படி மக்கள் வாழ மற்றும் நடந்து கொள்ளும் விதங்களுக்கு கிட்டத்தட்ட 154 தடைகள் இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த கிராமத்தில் வேட்டையாடுதல், மரம் வெட்டுதல் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த கிராமத்தில் நிறைய வரலாறு எழுதப்பட்டுள்ளது. அதைத் தவிர, கோனோமா கிராமம் வனவிலங்கு பாதுகாப்பில் அதன் முன்முயற்சிகளுக்கு பெயர் பெற்றது. இந்த கிராமம் இந்தியாவின் பசுமை கிராமமாகவும் அறியப்படுகிறது. இந்த கிராமம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கமென்டில் பகிர்ந்துக்கொள்ளுங்க..!

என் கல்லூரி நாட்களை நிறைவாக்கிய சினிமா அரட்டைகள்! | கிராமத்தானின் பயணம் 26

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Train: தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம்; IRCTC கொண்டுவந்த புதிய விதிமுறைகள் என்னென்ன?

ரயிலில் அடிக்கடி பயணம் மேற்கொள்வோருக்கும், அவசரத்திற்கு பயணம் மேற்கொள்வோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தட்கல் முன்பதிவில் சமீப காலமாக ஏகப்பட்ட புகார்கள் எழுந்துள்ளன.ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணையதளத... மேலும் பார்க்க

கீமோ சிகிச்சை முடிந்த கையோடு மலைப்பிரதேசப் பயணம்! - நம்பிக்கை ஒளியை வீசிய மணாலி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தொன்மையான அழகால் மயக்கும் ஹம்பி - பயண அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நம்பமுடியாத யதார்த்தம், ஒரு டிகிரியை எட்டிய குளிர்! - திசையெல்லாம் பனி- 3

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

`19000 லிட்டர் டீசல் மாயம்' -6 பேர் சஸ்பெண்ட்; நெல்லை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடந்தது என்ன?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், 8 கோட்டங்கள் மூலம் சுமார் 22 ஆயிரம் பேருந்துகளை பல்வேறு வழித்தடங்களில் இயக்கி வருகிறது. இதில் நெல்லை கோட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் என 3 மண... மேலும் பார்க்க