செய்திகள் :

``கோயில் நிதியில் கல்லூரி கட்டுவது நியாயமா?" - திமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

post image

கோவை சுற்றுப் பயணத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, " திமுக கூட்டணியை நம்பி தேர்தலில் நிற்கிறது. நாங்கள் மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம். கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் இருக்கிறதா என்றே தெரியவில்லை. முத்தரசன் ஸ்டாலினுக்கு அடிமையாக இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

முத்தரசன் அவர்களே உங்கள் கட்சி போல எங்கள் கட்சியை நினைத்துவிட வேண்டாம். உங்கள் கூட்டணியில் தான் பிரச்னை உள்ளது. உங்கள் கூட்டணியில் உள்ள சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், ‘திமுக மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதனால் தேர்தலில் வெற்றி பெற முடியாது.’ என்று சொல்கிறார்.

திமுக கூட்டணியில் தான் குழப்பம்

அதிமுக பாஜக கூட்டணி இணக்கமாக இல்லை என்று சொல்ல திருமாவளவன் யார். அவர் உள் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசுகிறார். திமுக கூட்டணியில் தான் குழப்பம் நிலவுகிறது. எங்கள் கூட்டணி நிலை குறித்து தெளிவு படுத்திவிட்டோம். நாங்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் உங்களுக்கு என்ன கவலை.

எடப்பாடி பழனிசாமி கூட்டம்

நம் கூட்டணியை பார்த்து திமுக கூட்டணிக்கு பயம் வந்துவிட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும். திமுக ஆட்சியில் கோவைக்கு எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை. எந்த நேரமும் குடும்பத்தை பற்றியே சிந்திக்கிறார்கள்.

திமுகவுக்கு கண் உறுத்துகிறது

50 மாத திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகப்பற்ற சூழல் நிலவுகிறது. அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. பொதுவாக கரன்டை தொட்டால்தான் ஷாக் அடிக்கும். திமுக ஆட்சியில் கரன்ட் பில்லை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. கோயில்களை கண்டாலே திமுகவுக்கு கண் உறுத்துகிறது. அந்தப் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி

இது நியாயமா. ஏன் அரசு பணத்தில் கல்லூரி கட்டக் கூடாதா. இதை சதி செயலாக மக்கள் பார்க்கிறார்கள். மனிதனுக்கு கண் எப்படி முக்கியமோ, நாட்டுக்கு கல்வி முக்கியம். அதை அரசாங்கம் செய்ய வேண்டும். ஸ்டாலின் ஆட்சியை  ஒரே வார்த்தையில் கூற வேண்டும் என்றால்  Simply waste." என்றார்.

இந்நிலையில் கோயில் பணத்தில் கல்லூரி கட்டுவது என்று எடப்பாடி பழனிசாமியின் கருத்தை அரசியல் களத்தில் சர்ச்சையாகியுள்ளது. அவரின் கருத்து பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை வெளிப்படுத்துவதாக திமுக கூட்டணி விமர்சித்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமி

நேற்று இரவு கோவை புலியகுளம் பகுதியுடன் எடப்பாடி பழனிசாமி தன் 2 நாள் கோவை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டார். நிறைவு கூட்டம் கோவை தெற்கு தொகுதியில் நடைபெற்றதால் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

பாஜக-அதிமுக கூட்டணி: "ஆட்சியில் இரட்டை இலையுடன் தாமரை மலரும்!" - தமிழிசை உறுதி

தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (ஜூலை 9) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.அப்போது அதிமுக -பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், “... மேலும் பார்க்க

`` 'உங்களுடன் ஸ்டாலின்’ ஊரை ஏமாற்றும் திட்டம்; சேவை உரிமைத் திட்டத்தை செயல்படுத்துங்கள்!"- அன்புமணி

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் 'உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை பாமக தலைவர் அன்புமணி விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "தமிழ்நாட்டு மக்களுக்கு அரசின் சேவைகளை... மேலும் பார்க்க

"இஸ்லாமியத் தாய்மார்கள் சிந்தும் கண்ணீர் இந்த ஆட்சியை வீழ்த்தும்" - சீமான் ஆவேசத்தின் பின்னணி என்ன?

"இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதாக அளித்த வாக்குறுதியை முதலமைச்சர் நிறைவேற்றவில்லை. குற்றத்தை ஒப்புக்கொள்ளமாறு சிறைவாசிகளுக்குச் சித்ரவதை நடக்கிறது" என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்... மேலும் பார்க்க

``நீ பாஜக-வில் சேர்ந்தால், நான் விஷயம் குடிப்பேன்" - தந்தை பஸ்வான் மிரட்டியது குறித்து சிராக் பேச்சு

பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் மாதத்துக்குப் பிறகு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், பீகாரில் தேசியக் கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள்வரை தீவிரமாக தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. இதற்கிடை... மேலும் பார்க்க

`பால் தாக்கரே கற்றுக்கொடுத்தது’ - குழம்பு சரியில்லை என கேன்டீன் உரிமையாளரை தாக்கிய சிவசேனா MLA

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ. ஒருவர் கேன்டீன் சாப்பாடு சரியில்லை என்பதற்காக ஊழியரை முகத்தில் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை சர்ச்கேட்டில் உள்ள எம்.எல்.ஏ. விடு... மேலும் பார்க்க