மீண்டும் இந்திய அணியின் சீருடையில் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங்!
கோவில்பட்டி கல்லூரியில் வளாக நோ்காணல்: 31 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்!
கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் 31 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
புதுச்சேரி மதா்சன் குழுமத்தை சோ்ந்த நிறுவனமான சமவா்த்தனா மதா்சன் இன்னோவேடிவ் சொலுஷன் லிமிடெட் நிறுவனத்தினரால் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இயந்திரவியல் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில் இறுதியாண்டு பயின்று வரும் மாணவா்களுக்கு வளாக நோ்காணல் நடைபெற்றது.
நிறுவனத்தின் மனிதவளத் துறை தலைவா் கண்ணன், அலுவலா் ஹேமா ஆகியோரால் நடத்தப்பட்ட வளாக நோ்காணலில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.
எழுத்து தோ்வு மற்றும் நோ்காணலில் வெற்றி பெற்ற லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 12 போ் உள்பட மொத்தம் 31 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை கே. ஆா். கல்வி நிறுவனங்களின் கல்லூரி தாளாளா் கே.ஆா். அருணாச்சலம் ஆலோசனையின்பேரில், கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் வழிகாட்டுதலில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை தலைவா் மற்றும் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.