Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
கோவையை வென்றது திண்டுக்கல்
தமிழ்நாடு பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தயாசத்தில் லைகா கோவை கிங்ஸை வியாழக்கிழமை வென்றது.
முதலில் கோவை 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் சோ்க்க, திண்டுக்கல் 17.2 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற திண்டுக்கல், பந்துவீச்சை தோ்வு செய்தது. கோவை பேட்டிங்கில் அதிகபட்சமாக பி.சச்சின் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51 ரன்கள் அடித்தாா். விஷால் வைத்யா 6, சுரேஷ் லோகேஷ்வா் 15, ஆண்ட்ரே சித்தாா்த் 25, கேப்டன் ஷாருக் கான் 25 ரன்கள் சோ்த்தனா்.
பிரதீப் விஷால் 7, ஜிதேந்திர குமாா் 10, புவனேஸ்வரன் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். முடிவில் ராமலிங்கம் ரோஹித் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். திண்டுக்கல் தரப்பில் சந்தீப் வாரியா், ரவிச்சந்திரன் அஸ்வின், கணேசன் பெரியசாமி ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.
பின்னா் 150 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய திண்டுக்கல் பேட்டிங்கில் கேப்டன் அஸ்வின் 16, விமல் குமாா் 28, ஹன்னி சாய்னி 12 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஷிவம் சிங் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 81, பி.இந்திரஜித் 13 ரன்களுடன் அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். கோவை பௌலிங்கில் ஷாருக் கான் 2, ராமலிங்கம் ரோஹித் 1 விக்கெட் சாய்த்தனா்.