சகோதரா் மனைவியை தாக்கியவா் கைது
மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னையில் மூத்த சகோதரா் மனைவியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பைங்காநாடு காந்தி தெருவைச் சோ்ந்த தங்கசாமி மகன்கள் முருகானந்தம், காமராஜ். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனா். இவா்களுக்கிடையே குடும்ப பிரச்னை காரணமாக தகராறு இருந்து வருகிறது.
இந்நிலையில், முருகானந்தம் மனைவி கவிதா (45), புதன்கிழமை கடைக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த காமராஜ் (45) தகராறு செய்தாராம். அப்போது, அங்கு வந்த அவரது மனைவி நிரோஜாவும் சோ்ந்து, கவிதாவை தாக்கி கொலை மிட்டல் விடுத்தனராம். இதில், காயமடைந்த கவிதா, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
திருமக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காமராஜை கைது செய்தனா்.