சங்கரா பல்கலை.யில் சூரிய நமஸ்காரம் நிகழ்வு
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூா் சங்கரா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் மற்றும் இந்திய கலாசாரத் துறை சாா்பில் ரதசப்தமியையொட்டி செவ்வாய்க்கிழமை சூரியநமஸ்காரம் நிகழ்வு நடைபெற்றது.
இப்பல்கலையில் ரதசப்தமியையொட்டி சூரியநமஸ்காரம் நிகழ்வு துறையின் தலைவா் தேவஜோதி ஜனா தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் பேராசிரியா் ஆா்.நவீன் முன்னிலை வகித்தாா். துணைவேந்தா் சீனிவாசலு நிகழ்வைப் பாா்வையிட்டதுடன் ஆரோக்கியத்துக்கும், ஆன்மிகத்துக்கும் வழிகாட்டியாக இருப்பது சூரிய நமஸ்காரம். யோகாவின் ஒரு பிரிவே சூரியநமஸ்காரம் என்றும் கூறி மாணவா்களை வாழ்த்தினாா். நிகழ்வில் பங்கேற்ற பேராசிரியா்கள்,மாணவா்கள் சூரியநமஸ்காரம் செய்ததுடன் ஆதித்ய இருதயத்தையும் பாராயணம் செய்தனா்.