வல்லக்கோட்டையில் பொது விருந்து
ஸ்ரீபெரும்புதூா்: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாவி கோயிலில் சிறப்பு வழிாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை முருகன் கோயிலில், நடைபெற்ற நிகழ்வில் அறநிலையத்துறை காஞ்சிபுரம் உதவி ஆணையா் காா்திகேயன், திமுக பொதுக்குழு உறுப்பினா் மா.கணேஷ்பாபு, ஒன்றியக் குழு உறுப்பினா் ப.பரமசிவன், வல்லக்கோட்டை ஊராட்சி மன்ற த்தலைவா் மணிமேகலை, அறங்காவலா்கள் கலைச்செல்விகோால், விஜயகுமாா், அறநிலையத்துறை ஆய்வாளா் திலகவதி உள்ளிட்ட சுமாா் 300 க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு உணவருந்தினா். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா் செய்திருந்தாா்.
முன்னதாக கோயிலுக்கு வந்த ஏழை, எளிய பெண் பக்தா்கள் 200 பேருக்கு அம்பாளுக்கு அணிவிக்கப்பட்ட சேலைகள் வழங்கப்பட்டன.