இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் விலகு...
சத்தியமங்கலத்தில் பரவலாக மழை
சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.
இந்நிலையில், சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து மாலையில் பரவலாக மழை பெய்தது.
சத்தியமங்கலம், பவானிசாகா், புன்செய்புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், வெப்பாத்தின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.