செய்திகள் :

சத்ரபதி சிவாஜியாக ரிஷப் ஷெட்டி! போஸ்டர் வெளியீடு!

post image

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவாகும் சத்ரபதி சிவாஜி படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கன்னட நடிகராக சின்னச் சின்ன படங்களில் நடித்து வந்த ரிஷப் ஷெட்டி காந்தாரா திரைப்படத்திற்குப் பின் மிகப்பெரிய நட்சத்திர நடிகராக உருவெடுத்துள்ளார். அப்படத்தின் வணிகம் இந்தியா முழுவதும் அவரை பிரபலப்படுத்தியது.

தொடர்ந்து, காந்தாரா - 2 பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, ஹனுமன் - 2 மற்றும் பிரஷாந்த் நீல் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இதையும் படிக்க: ரஜினி வசூலை முறியடித்த விஜய் சேதுபதி!

இந்த நிலையில், சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கைக் கதையாக உருவாகும் ’சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ படத்தில் சிவாஜியாக ரிஷப் ஷெட்டி நடிக்க உள்ளதை அறிவித்துள்ளனர்.

சந்தீப் சிங் இயக்கும் இப்படத்தின் முதல் அறிவிப்பு போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.

இப்படம் உலகளவில் 21.1.2027 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காந்தாரா படத்திற்குப் பின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ரிஷப் ஷெட்டி ஒப்பந்தமாகி வருவது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஏற்கனவே, நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் சத்ரபதி சிவாஜி வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.04-12-2024 (புதன் கிழமை)மேஷம்:இன்று குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செ... மேலும் பார்க்க

7-ஆவது சுற்றும் 'டிரா': குகேஷ் முதலில் ஏற்றம்; பின்பு ஏமாற்றம்

சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் டி.குகேஷ் } நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் மோதிய 7}ஆவது சுற்றும் செவ்வாய்க்கிழமை டிரா}வில் முடிந்தது. இரு போட்டியாளர்களும் தொடர்ந்து 4}ஆவது ... மேலும் பார்க்க

தமிழ்நாடை வென்றது சௌராஷ்டிரம்

இந்தூா்: சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு 58 ரன்கள் வித்தியாசத்தில் சௌராஷ்டிரத்திடம் செவ்வாய்க்கிழமை தோற்றது. முதலில் சௌராஷ்டிரம் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு ... மேலும் பார்க்க

ஜிம்பாப்வே டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

புலாவயோ: ஜிம்பாப்வேக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை அந்த அணி 2-0 என கைப்பற்றியுள்ளது. ஏற்கெனவே, ஒ... மேலும் பார்க்க

புணேவை வீழ்த்தியது மும்பை

புணே: புரோ கபடி லீக் போட்டியின் 90-ஆவது ஆட்டத்தில் யு மும்பா 43-29 என்ற புள்ளிகள் கணக்கில் புணேரி பல்டன் அணியை செவ்வாய்க்கிழமை சாய்த்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், மும்பா அணி 20 ரெய்டு புள்ளிகள்,... மேலும் பார்க்க

துளிகள்...

இந்திய பாட்மின்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து, ஹைதராபாதை சோ்ந்த தொழிலதிபா் வெங்கட தத்தா சாயை வரும் 22-ஆம் தேதி உதய்பூரில் திருமணம் செய்கிறாா். சப் ஜூனியா் தேசிய மகளிா் ஹாக்கி போட்டியில் மிஸோரம், ஜாா்க்... மேலும் பார்க்க