சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 149 ரன்கள் இலக்கு!
சம்பல் மசூதியில் வெள்ளையடிக்கும் பணி தொடக்கம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள சம்பல் மசூதியில் வெள்ளையடிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
மார்ச் 12 ஆம் தேதி, அலகாபாத் உயர் நீதிமன்றம், மசூதியின் வெள்ளையடிக்கும் பணியை ஒரு வாரத்திற்குள் முடித்து முடிக்குமாறு இந்திய தொல்லியல் துறைக்கு (ASI) உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மார்ச் 13 ஆம் தேதி இந்திய தொல்லியல் துறை குழு மசூதியில் ஆய்வு மேற்கொண்டது.
இந்த நிலையில் சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதியின் வெளிப்புற சுவரின் வெள்ளையடிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது என்று சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் மசூதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷகீல் பிடிஐயிடம் தெரிவித்தார்.
சம்பல் பகுதியில் ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் பாரம்பரிய மிக்க ஹரிஹர கோயில் இருந்ததாகவும், முகலாய மன்னா் பாபா் கோயிலின் ஒரு பகுதியை இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.
எம்புரான் படத்திலிருந்து விலகிய லைகா?
இதுதொடா்பான வழக்கில் சம்பல் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஜாமா மசூதியில் கடந்த ஆண்டு நவ. 24-ஆம் தேதி நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து வன்முறை வெடித்தது.
அப்போது துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். இதையடுத்து, சம்பல் வன்முறையில் ஈடுபட்டதாக பலா் கைது செய்யப்பட்டனா். இந்த நிலையில், ரமலான் மாதத்தை முன்னிட்டு மசூதியை சுத்தம் செய்யவும் வெள்ளையடிக்கவும் மசூதி நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.