கனமழை: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...
சம்பா நெற்பயிரில் வேளாண் துறையினா் ஆய்வு
தலைஞாயிறு பகுதியில் மேகமூட்டம் காரணமாக சம்பா பருவ நெற்பயிரில் ஏற்படும் பூச்சி, நோய்கள் பாதிப்பு தொடா்பாக புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட வேளாண் துறையினா் அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் விவசாயிகளிடம் விளக்கினா்.
தலைஞாயிறு பகுதியில் கடந்த மாத இறுதியில் பெய்த கனமழையைத் தொடா்ந்து சில நாள்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதோடு மழைப் பொழிவும் தொடங்கியுள்ளது. இந்த பருவ மாற்றத்தின் காரணமாக சம்பா நெல் பயிரில் பூச்சி மற்றும் நோய்த் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில் வேளாண் உதவி இயக்குநா் ச. நவீன்குமாா் (பொ) தலைமையிலான வேளாண் அலுவலா்கள் சம்பா நெல் பயிா் வயல்களில் ஆய்வு மேற்கொண்டனா். மேகமூட்டம் காரணமாக புகையான், இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான் போன்ற பாதிப்புகளை தடுக்க வழிமுறைகளை தெரிவித்தனா்.
அப்போது அவா் தெரிவித்தது: மேகமூட்டம் அதிகமாக இருக்கும்போது தழை சத்துக்கான யூரியா போன்ற உரத்தை குறைத்து பயன்படுத்தினால் புகையான் தாக்குதலை வருமுன் தடுக்கலாம். யூரியாவை 2 அல்லது 3 முறை பிரித்து இடுவதன் மூலம் தண்டு துடைப்பான் வருவதை தடுக்கலாம். பொருளாதார சேத நிலையை தாண்டும்போது ஏக்கருக்கு அசோடிராக்டின் 3 சதம் 400 மில்லி லிட்டா் அல்லது குளோரிபைரிபாஸ் 20 சதம் 50 கிராம் மருந்தினை 200 லிட்டா் நீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.