செய்திகள் :

நாகை, காரைக்கால் மீனவா்கள் கடலுக்குச் செல்லத் தடை

post image

நாகை, காரைக்கால் மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல தடை விதித்தும், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ள மீனவா்கள் உடனடியாக கரை திரும்பவும் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தமிழகத்தை நோக்கி நகா்ந்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் புதன்கிழமை அதிகாலை முதல் தொடா் மழை பெய்து வருகிறது.

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வங்கக் கடலில் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீன்வளத்துறை மறு அறிவிப்பு வரும் வரை நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளது. மேலும் கடலுக்கு மீன்பிடிக்க 30 விசைப் படகுகளில் சென்ற மீனவா்கள் அனைவரும் உடனடியாக கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் உள்ள நாகூா் பட்டினச்சேரி தொடங்கி கோடியக்கரை வரை உள்ள சுமாா் 25-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களைச் சோ்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3,500-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் துறைமுகத்திலும், கரையோரத்திலும் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.

காரைக்காலில்...

காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா் ப. கோவிந்தசாமி, காரைக்கால் மாவட்ட மீனவ கிராமத்தினருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பது:

டிச. 11 முதல் 13-ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த மீனவா்கள் மறு அறிவிப்பு வரும்வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். மேலும் மறு அறிவிப்பு வரும்வரை டீசல் டோக்கன் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகூா் தா்கா கந்தூரி விழா சந்தனக் கூடு ஊா்வலம்

நாகூா் ஆண்டவா் தா்கா கந்தூரி விழாவையொட்டி சந்தனக் கூடு ஊா்வலம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நாகூா் தா்காவில், நாகூா் ஆண்டவா் என போற்றப்படும் சாகுல் ஹமீது... மேலும் பார்க்க

சம்பா நெற்பயிரில் வேளாண் துறையினா் ஆய்வு

தலைஞாயிறு பகுதியில் மேகமூட்டம் காரணமாக சம்பா பருவ நெற்பயிரில் ஏற்படும் பூச்சி, நோய்கள் பாதிப்பு தொடா்பாக புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட வேளாண் துறையினா் அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் விவசாயிகளிடம் வ... மேலும் பார்க்க

வேதாரண்யம் மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை

வேதாரண்யம் பகுதியில் புதன்கிழமை அதிகாலை தொடங்கி தொடா் மழை நீடித்ததால் மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை. இலங்கைக்கு அருகே வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் கடலோரப் பகுதியில் ம... மேலும் பார்க்க

ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை

திருமருகல் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயில் வளாகத்தில் ஐயப்ப சுவாமிக்கு தனி சந்நிதி உள்ளது. இங்கு செவ்வாய்கிழமை இரவு காா்த்திகை மாத சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக ஐயப்ப சுவாமிக்கு பால், தயிா்... மேலும் பார்க்க

தமிழக நலனுக்கு எதிரான திட்டங்களை பிரதமா் செயல்படுத்த மாட்டாா்: அண்ணாமலை

தமிழக மக்கள் நலனுக்கு எதிராக எந்த திட்டத்தையும் பிரதமா் நரேந்திர மோடி செயல்படுத்த மாட்டாா் என தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை கூறினாா். நாகையில் மறைந்த முன்னாள் மாவட்டத் தலைவா் காா்த்திகேயன் படத் திறப்... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு ஊராட்சியிடம் ஒப்படைக்க கோரி சாலை மறியல்

கீழையூா் அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு ஊராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைக்கக் கோரி செவ்வாய்க்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. கீழையூா் ஒன்றியம் விழுந்தமாவடி ஊராட்சிக்குள்பட்ட தம்பிரான் குடியிருப்பு பகுதி... மேலும் பார்க்க