``என் மனைவி ISI ஏஜென்ட் என்றால், நான் RAW ஏஜென்ட்.." - பாஜக குற்றச்சாட்டுக்கு கா...
சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ச்சியாக பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 2 பேரை, குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ந்து கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளான, துறைமங்கலத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த ராமநாதன் மகன் சசிகரன் (32), இவரது தம்பி ரவிகரன் (30) ஆகியோரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.
அதன்படி, மேற்கண்ட இருவரையும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் புதன்கிழமை உத்தரவிட்டாா்.