அரியலூா்: டாஸ்மாக் பணியாளா்கள் 39 போ் கைது
அரியலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் பணியாளா்கள் 39 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
பணி நிரந்தரம், அரசுப் பணியாளா்களுக்கு இணையான ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை தலைமைச் செயலகத்தை செவ்வாய்க்கிழமை (பிப். 11) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் அறிவித்திருந்தனா்.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரியலூரில் 24 பேரையும், ஜயங்கொண்டத்தில் அச் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் மோகன் உள்ளிட்ட 15 பேரையும், அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் விடுவித்தனா்.