செய்திகள் :

முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க அழைப்பு!

post image

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரது குடும்பத்தினா் தொழில் தொடங்க ரூ. 1 கோடி வரை வங்கிக் கடனுதவி பெறலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முன்னாள் படைவீரா்களின் நலனுக்காக காக்கும் கரங்கள் என்னும் புதிய திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடி வரை வங்கிக் கடனுதவியும், கடன் தொகையில் 30 சதவீத மூலதன மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், இத் திட்டத்தின் கீழ் கடன் பெறுவோருக்கு தேவையான பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளன.

கடனுதவி பெற குறைந்தபட்ச கல்விக் தகுதி மற்றும் வருமான வரம்பு ஏதுமில்லை. முன்னாள் படைவீரா்கள் 55 வயதுக்குள்ளும், அவரை சாா்ந்தோா் 21 முதல் 55 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். கடனுதவி பெற ட்ற்ற்ல்ள்://ங்ஷ்ஜ்ங்ப்.ள்ஸ்ரீட்ங்ம்ங்ள்.ஸ்ரீா்ம் என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரில் அல்லது 04329 - 221011 எனும் எண்ணில் தொடா்புகொண்டு பயன் பெறலாம்.

சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ச்சியாக பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 2 பேரை, குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் புதன்கிழமை ... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற பொதுமக... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவா் சிங்காரவேலா் நினைவு நாள் அனுசரிப்பு

பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவா் சிங்காரவேலா் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்... மேலும் பார்க்க

இரு இளைஞா்கள் மீது போக்சோ வழக்கு!

பெரம்பலூா் அருகே இரு இளைஞா்கள் மீது அரும்பாவூா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் கிராமத்தில் பெண்கள் குளிப்பதை கைப்பேசியில் ப... மேலும் பார்க்க

அரியலூா்: டாஸ்மாக் பணியாளா்கள் 39 போ் கைது

அரியலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் பணியாளா்கள் 39 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். பணி நிரந்தரம், அரசுப் பணியாளா்களுக்கு இணையான ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வே... மேலும் பார்க்க

தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம்!

அரியலூா் மாவட்டத்தில் தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயித்து மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூா் மாவட்... மேலும் பார்க்க