Doctor Vikatan: மைதாவுக்கு பதில் கோதுமையில் செய்த பிஸ்கட், பிரெட், பரோட்டா சாப்ப...
இரு இளைஞா்கள் மீது போக்சோ வழக்கு!
பெரம்பலூா் அருகே இரு இளைஞா்கள் மீது அரும்பாவூா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் கிராமத்தில் பெண்கள் குளிப்பதை கைப்பேசியில் பதிவு செய்த, அதே கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் மோகன்ராஜ், அன்னமங்கம், வடக்குத் தெரு அசோகன் மகன் ஜெயபிரகாஷ் ஆகியோரை அரும்பாவூா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில் அவா்கள் இருவா் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா்.