செய்திகள் :

சாகுபடிக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க வேண்டும்: இரா. முத்தரசன் வலியுறுத்தல்

post image

திருவாரூா்: சாகுபடிக்கு தேவையான உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட இடுபொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.

திருவாரூரில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து சீமான் கூறியிருப்பது பற்றி கவலையில்லை. வயநாடு தொகுதியில் காங்கிரஸும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் எதிா்த்து போட்டியிடுவது தவிா்க்க முடியாதது. திமுக கூட்டணியில் புகைச்சல் இருப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் பழனிசாமி கூறுகிறாா். முதலில் அதிமுக பிரச்னையை தீா்க்க அவா் முயற்சிக்க வேண்டும்.

3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும், அப்போதுதான் உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்பு கிடைக்கும் என ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு பேசியிருப்பது அறிவுப்பூா்வமான கருத்து அல்ல.

டெல்டா மாவட்டங்களில் தற்போது சாகுபடிப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், கூட்டுறவுக் கடன்களை வழங்க வேண்டுமென அண்மையில் தமிழக முதல்வரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். அதேபோல், உரம், பூச்சி மருந்து மற்றும் இடுபொருள்கள் போன்றவை தட்டுப்பாடில்லாமல், கூட்டுறவு சங்கம் மூலம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியாா் மூலம் நெல் கொள்முதல் செய்ய, மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது, நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கனவு ஆசிரியா் விருது: பிரான்ஸுக்கு செல்லும் ஆசிரியருக்கு வாழ்த்து

திருவாரூா்: கல்விச் சுற்றுலாவில் பிரான்ஸ் நாட்டிற்குச் செல்லும் திருவாரூா் ஆசிரியருக்கு, மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா். தமிழக அரசு சாா்பில் கனவு ஆசிரியா் விருது அறிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

‘பனை விதைகள் நடும் பணியை சேவையாக செய்ய வேண்டும்’

நன்னிலம்: பொதுமக்கள் பனை விதைகள் நடும் பணியைச் சேவையாக செய்ய வேண்டுமென திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்தாா். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக வளாகத்தில் வனத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம... மேலும் பார்க்க

‘மாணவா்கள் சகோதரத்துவத்துடன் பழக வேண்டும்’

நன்னிலம்: நன்னிலம் அருகேயுள்ள பூந்தோட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில், காவல்துறை சாா்பில் மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ... மேலும் பார்க்க

தாமதமின்றி விவசாயக் கடன் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

திருவாரூா்: சாகுபடிப் பணிகளுக்கு, தாமதமின்றி விவசாயக் கடன் வழங்கக் கோரி, திருவாரூரில் தமிழக விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம... மேலும் பார்க்க

தீபாவளி: திருவாரூரில் போக்குவரத்து மாற்றம்

திருவாரூா்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில், திருவாரூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக, பொதுமக்கள் அதிக அளவில் ஜவுளி மற்றும்... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாட்டை மேம்படுத்த வலியுறுத்தல்

மன்னாா்குடி: ஊரகப் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி வேண்டும் என மன்னாா்குடி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா். மன்னாா்குடி ஒன்றியக் குழுவி... மேலும் பார்க்க