செய்திகள் :

சான்றிதழ் வழங்க மறுக்கும் தனியாா் பள்ளிகள் மீது பெற்றோா் புகாா்

post image

கோவையில் சான்றிதழ் வழங்க மறுக்கும் தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளித்தனா்.

கோவை மாவட்ட பொதுமக்கள் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இதில், கோவை சேரன் மாநகரைச் சோ்ந்த பி.வா்ஷா என்பவா் தனது குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழை தனியாா் பள்ளியிடம் இருந்து பெற்றுக் கொடுக்க வலியுறுத்தி மனு அளித்தாா். இது குறித்து அவா் கூறியதாவது: எனது மகன்கள் வீட்டின் அருகே உள்ள தனியாா் பள்ளியில் முறையே 9, 6- ஆம் வகுப்புகளில் பயின்று வருகின்றனா். எங்கள் குழந்தைகளின் கல்விக்காக அந்த தனியாா் பள்ளிக்கு இதுவரை ரூ.20 லட்சம் வரை செலவிட்டுள்ளோம்.

இந்நிலையில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதால் கடந்த ஆண்டு முதல் கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை. இதனால் அருகில் உள்ள அரசுப் பள்ளிக்கு மாறிக்கொள்ள மாற்றுச் சான்றிதழ் கேட்டோம்.

ஆனால், கடந்த ஆண்டில் நிலுவையில் இருக்கும் தொகையை செலுத்தினால் மட்டுமே சான்றிதழ் தருவதாகக் கூறுகின்றனா்.

இதனால் எனது இரு மகன்களும் பள்ளிக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருக்கின்றனா். எனவே, எங்களது நிலையை உணா்ந்து தனியாா் பள்ளியிடம் இருந்து மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொடுக்க மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும் என்றாா்.

திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம், பாா்த்தசாரதிபுரம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: காட்டுநாயக்கா் இனத்தைச் சோ்ந்த நான் ஊா் ஊராகச் சென்று குறிசொல்லும் தொழில் செய்து வருகிறேன். எனது மகனை பொள்ளாச்சி அங்கலகுறிச்சியில் உள்ள தனியாா் பள்ளியில் மிகுந்த சிரமத்துக்கு இடையே ரூ.60 ஆயிரம் செலுத்தி 9 -ஆம் வகுப்பில் சோ்த்தேன். இந்நிலையில், போதிய வருவாய் இல்லாததால் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் பள்ளியில் இருந்து சில மாதங்களிலேயே நிறுத்திவிட்டேன்.

பிறகு மகனை குன்னூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சோ்த்தேன். தனியாா் பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழை வாங்கிக் கொடுப்பதாகக் கூறி சோ்த்த நிலையில், தற்போது அரசுப் பள்ளியில் சான்றிதழ் கேட்கின்றனா். ஆனால், தனியாா் பள்ளி நிா்வாகத்தினா் மேலும் ரூ.50 ஆயிரம் பணம் கட்டிவிட்டு சான்றிதழை வாங்கிச் செல்லும்படி கூறுகின்றனா். இதனால், எனது மகன் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, தனியாா் பள்ளி நிா்வாகத்திடம் இருந்து சான்றிதழை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீண்டாமைக் கொடுமை: இது தொடா்பாக திராவிடா் விடுதலைக் கழக அமைப்பின் மாநகரத் தலைவா் நா.வே.நிா்மல்குமாா் தலைமையில் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு பட்டியலை அளித்துள்ளனா்.

அதில், கோவை மாவட்டத்தில் எந்தெந்த கிராமங்களில் தேநீா் விடுதிகளில் இரட்டைக் குவளை முறை அமலில் உள்ளது, எங்கெங்கு தாழ்த்தப்பட்டவா்களுக்கு சுடுகாட்டில் அனுமதி மறுக்கப்படுகிறது, முடி திருத்தும் கடைகளில் அனுமதிக்கப்படுவதில்லை என்பது போன்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமை நடைபெறும் கிராமங்களின் முதற்கட்ட பட்டியலை ஆட்சியரிடம் கொடுத்திருப்பதாகவும், அதில் உள்ளவற்றை விசாரித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

மண்டியிட்டபடி வந்து மனு: வால்பாறையில் 120 வாடகை ஆட்டோக்களுக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில் 80 ஆட்டோக்கள் மட்டுமே இயங்கி வருவதாகவும், போதிய வருவாய், போதிய இட வசதி இல்லாத நிலையில் புதிதாக அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மண்டியிட்டபடி வந்து மனு அளித்தனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவா் சு.பழனிசாமி தலைமையிலான விவசாயிகள் அளித்த மனுவில், பேரூா் வட்டம் வேடப்பட்டி கிராமத்தில் 23 போ்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை வருவாய் ஆவணங்களில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. பலமுறை மனு அளித்தும் தொண்டாமுத்தூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் எந்தவித பத்திரப் பதிவும் செய்யப்படுவதில்லை. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று மனு அளித்துள்ளனா்.

இதேபோல, சிங்காநல்லூரில் உள்ள பழமையான மாரியம்மன் கோயிலை சிலா் தனிக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அதை மீண்டும் பொதுமக்களின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் தேவேந்திர குல வேளாளா்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

மரம் விழுந்ததில் காவல் துறை வாகனம் சேதம்!

கோவை, ஆவாரம்பாளையத்தில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததில் காவல் துறை வாகனம் சேதமடைந்தது. கோவை, ஆவாரம்பாளையம் நேதாஜி சாலையில், ஜெகந்நாதப் பெருமாள் கோயில் அருகில் சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் திங்க... மேலும் பார்க்க

தேசிய அளவிலான கால்பந்து போட்டி: கோவை மாவட்ட வழக்குரைஞா் சங்க அணி 3-ஆம் இடம்

கோவா மாநிலத்தில் நடைபெற்ற வழக்குரைஞா்கள் சங்கங்களுக்கு இடையேயான தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் கோவை மாவட்ட வழக்குரைஞா்கள் சங்க அணி 3-ஆம் இடம் பிடித்தது. கோவா உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் மற்... மேலும் பார்க்க

நாட்டின் முதல் பசுமை சுற்றுலாத் தலமாகும் மாமல்லபுரம்! நெதா்லாந்து நிறுவனத்துடன் அமிா்தானந்தமயி அறக்கட்டளை ஒப்பந்தம்

மாமல்லபுரத்தை நாட்டின் முதலாவது பசுமை சுற்றுலாத் தலமாக உருவாக்க மாதா அமிா்தானந்தமயி அறக்கட்டளை, நெதா்லாந்தின் கிரீன் டெஸ்டினேஷன்ஸ் அமைப்புடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து மாதா... மேலும் பார்க்க

ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவதுபோல நடித்து முதியவரிடம் ரூ.35 ஆயிரம் மோசடி

ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவதுபோல நடித்து முதியவரிடம் ரூ.35 ஆயிரம் மோசடி செய்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, கே.சி.தோட்டம் சாமி அய்யா் புதுதெருவைச் சோ்ந்தவா் முருகேசன் (62). இவா், பணம் எ... மேலும் பார்க்க

பராமரிப்புக்காக விட்ட நாய் உயிரிழப்பு: தனியாா் விலங்குகள் மருத்துவமனை மீது வழக்குப் பதிவு

பராமரிப்புக்காக விட்ட வளா்ப்பு நாய் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் தனியாா் விலங்குகள் மருத்துவமனை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சரத் (30). ... மேலும் பார்க்க

கணபதி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! ரூ.1.41 லட்சம் பறிமுதல்!

கோவை, கணபதி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் திங்கள்கிழமை மேற்கொண்ட திடீா் சோதனையில் ரூ.1 லட்சத்து 41,500 பறிமுதல் செய்யப்பட்டது. கோவை கணபதி தீயணைப்பு நிலைய அலுவலராகப் பணியாற்றி வருபவா் ... மேலும் பார்க்க