செய்திகள் :

சாப்பிட்டவுடன் டீ/காஃபி குடிக்கலாமா?

post image

காலையில் எழுந்தவுடனும், வெளியில் செல்லும்போதும் சில குறிப்பிட்ட உணவுகளுக்குப் பின்னரும் டீ/காஃபி அருந்துவது பெரும்பாலானோருக்கு வழக்கமான ஒன்று. இதனால் நாளுக்கு நாள் டீக்கடைகளும் டீ பிரியர்களும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். காஃபிக்கும் அப்படியே...

இதில் சாப்பிட்டவுடன் டீ அல்லது காஃபி குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. குறிப்பாக ஹோட்டல்களுக்குச் சென்றால், காலை அல்லது இரவு உணவுக்குப் பின்னர் டீ/காஃபி அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் அதன் பிரியர்கள். ஏனெனில் இது செரிமானத்திற்கு உதவும், புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும் என்றெல்லாம் நம்பப்படுகிறது.

ஆனால், சாப்பிட்டவுடன் டீ/காஃபி குடிக்கலாமா? அப்படி குடித்தால் ஏதேனும் பிரச்னைகள் ஏற்படுமா?

இதையும் படிக்க | பல் சொத்தைக்கு டீ/காஃபிதான் காரணமா? - மருத்துவர் என்ன சொல்கிறார்?

Coffee,

ஐசிஎம்ஆர் கூறுவது...

உணவுக்கு முன் அல்லது பின் தேநீர் அல்லது காபி சாப்பிடுவதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்(ஐசிஎம்ஆர்). அவ்வாறு அருந்துவது பல்வேறு சுகாதார பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது.

ஒரு கப் (150 மி.லி.) காஃபியில் பொதுவாக 80-120 மில்லி கிராம். காஃபின் உள்ளது. அதேநேரத்தில் இன்ஸ்டன்ட் காஃபியில் இது 50-65 மி.கி. இருக்கும்.

ஒரு கப் தேநீரில் சுமார் 30-65 மி.கி. காஃபின் உள்ளது. காஃபின் அளவைப் பொறுத்தே பாதிப்புகள் உள்ளன.

மேலும் முக்கியத் தகவலாக, இரும்பு உறிஞ்சப்படுதலைத் தடுக்கும் டானின்கள் டீ மற்றும் காஃபியில் உள்ளன.

சாப்பிட்டவுடன் டீ/காஃபி குடிக்கும்போது இந்த டானின்கள், உடலானது மற்ற உணவுகளில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சுதலில் தடையை ஏற்படுத்துகிறது. இரும்புச்சத்து ரத்த உற்பத்திக்கு இன்றியமையாதது என்பதால் ரத்த சோகை ஏற்படலாம்.

எனவே, உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னும் சாப்பிட்ட ஒரு மணி நேரம் பின்னும் டீ/காஃபியைத் தவிர்க்க வேண்டும்.

மற்ற உணவுகளில் உள்ள சத்துகளை உடல் பெற வேண்டும் என்றால் இவ்வாறு செய்வது அவசியமானது.

இதையும் படிக்க | புத்தாண்டில் எடுக்க வேண்டிய டாப் 10 தீர்மானங்கள்!

பால் அல்லாத தேநீர்

மேலும் டீ குடிக்கும்போது பால் அல்லாத டீ குடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. பிளாக் டீ/ க்ரீன் டீ ஆகியவற்றை பருகலாம்.

இந்த வகை டீயில் தியோப்ரோமைன், தியோபிலின் போன்ற சேர்மங்கள் ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. கரோனரி இதய நோய், வயிற்று புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

அதேபோன்று காஃபியும் காஃபின் அளவு மிதமாக இருக்குமாறு எடுத்துக்கொள்ளலாம். இது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது. நாள் ஒன்றுக்கு எடுத்துக்கொள்ளும் டீ/காஃபி அளவு 300 மி.லி.யைத் தாண்டக்கூடாது. அதிக அளவு காபி உட்கொள்வது உயர் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

இதையும் படிக்க | வீட்டில் சமைக்கிற உணவிலும் வில்லங்கமா? எப்படி?

புத்தாண்டில் எடுக்க வேண்டிய டாப் 10 தீர்மானங்கள்!

2025 புத்தாண்டு பிறந்ததையொட்டி உலகம் முழுவதும் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புத்தாண்டையொட்டி புதிய தீர்மானங்களை எடுப்பதும் அதில் பெரும்பாலானோர், சில நாள்கள் மட்டும் அந்த தீர்மானங்களை பரபரப்ப... மேலும் பார்க்க

பல் சொத்தைக்கு டீ/காஃபிதான் காரணமா? - மருத்துவர் என்ன சொல்கிறார்?

- டாக்டர் ஏ. சுப்பையா வாய்தான் உடலின் நுழைவாயில் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்துக்கு பல் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். உலக சுகாதார நிறுவனத்தின் தகவலின்படி, உலகத்திலே... மேலும் பார்க்க

வீட்டில் சமைக்கிற உணவிலும் வில்லங்கமா? எப்படி?

'ஏன் வெளிய சாப்புடுற, உடம்புக்கு நல்லதல்ல' பெரும்பாலாக நம் குடும்பத்தில் பெரியவர்கள் இப்படி சொல்லக் கேட்டிருப்போம். ஹோட்டலில் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன என்பதை ஒவ்வொருமுறை வெளியே சாப்ப... மேலும் பார்க்க