ரூ.1141.23 கோடியில் செய்யூர் – வந்தவாசி – போளூர் சாலை: முதல்வர் திறந்து வைத்தார்...
சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகும் ஆப்கனுக்காக விளையாட விரும்பும் முகமது நபி!
சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகும் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாட விரும்புவதாக அந்த அணியின் மூத்த வீரர் முகமது நபி தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் (பிப்ரவரி 19) தொடங்குகிறது. கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தான் அணி வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடுகிறது.
இதையும் படிக்க:பும்ரா இல்லாதது வங்கதேச அணிக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு: முன்னாள் வீரர்
விளையாட விரும்பும் முகமது நபி
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்னும் இரண்டு நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகும் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாட விரும்புவதாக அந்த அணியின் மூத்த வீரர் முகமது நபி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: என்னுடைய எதிர்காலம் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ளது ஆப்கானிஸ்தான் அணிக்காக நான் விளையாடும் கடைசி ஒருநாள் போட்டிகளாக இருக்காது என நினைக்கிறேன். சாம்பியன்ஸ் டிராபி முடிவடைந்த பிறகும், சில ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டும் என நினைக்கிறேன். இது குறித்து மூத்த வீரர்களிடம் ஆலோசனை செய்துள்ளேன். நான் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது எனது உடல் தகுதியை பொருத்தே அமையும் என்றார்.
ஆப்கானிஸ்தான் அணியின் மூத்த வீரரான முகமது நபிக்கு 40 வயது என்பது குறிப்பிடத்தக்கது.